உள்ளடக்கத்திற்குச் செல்ல
07.11.2026
புத்தக மதிப்புரை

சிறகை

சரவணன் மாணிக்கம்விமர்சகர்கருப்புப் பிரதிகள்

ஆசிரியர் குறிப்பு:

யாழ்மாகாணத்தின் ஆவாரங்காலில் பிறந்தவர்.  தற்போது பிரான்ஸில் வசிக்கிறார்.  ஆக்காட்டி இதழின் தொகுப்பாசிரியர்.  இவரது கட்டுரைகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன.  ஒரு சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.  இது குறுநாவல்.

நவீன நாவல்களில் பல Plot driven என்ற Conceptஐ உடைக்க முயல்கின்றன.  Presentation, Language & techniques இவை மூன்றிலும் முக்கிய கவனம் செலுத்துகின்றன.  அந்த வகையில் அமைந்த நாவலிது.

Presentationஐப் பொறுத்தவரை நாவல் நினைவுகளின் பயணமாக விரிகிறது.  சுற்றிலும் புறக்காட்சிகள் இல்லாமலில்லை, ஆனால் அகஅவசங்களே இந்த நாவலின் மையம்.  அந்த வகையில் இந்த நாவலுக்கு ‘சிறகை’ என்ற தலைப்பு பெரிதும் பொருந்துகிறது.  First person கதைசொல்லலைப் புத்திசாலித்தனமாக உபயோகித்த நிவல்களில் இதுவும் ஒன்று. கதைசொல்லி ஹீரோ இல்லை.

மொழியின் செறிவு அங்கங்கே வாசிப்பைத் தடைசெய்து மீள்வாசிப்பைக் கோருகிறது.  அம்மானுடன் நடத்தும் உரையாடல்கள், சிவப்புடன், முக்கியமாக அம்மாவுடன் என்று வெவ்வேறு நபர்களுடன் பேசுகையில் அது மாற்றம் கொள்கிறது.  உதாரணத்திற்கு அம்மாவுடன் இருக்கும் இடமெல்லாம் கனவின் சாயல்.

நாவலை நினைவின் சிதறல்களாக அமைக்கவில்லை.  சித்திரைமுகாமில் வெளியேறியதிலிருந்து அது எதையெல்லாம் சொல்லவேண்டுமோ அதைத் துகள்களாகச் சொல்லுகிறது.  “உங்களை மிகைநம்பிகைகள் வழிநடத்துகின்றன” போன்று பலவரிகளில் இவரது நிலைப்பாடு தெரிகிறது.  தோற்றவர்கள் மேல் எல்லாப்பழியும் விழுதல் இயல்பு.  நாவலின் கடைசிப்பகுதி, நெடுங்கவிதையும் கனவும் கலந்ததைப் போலிருக்கிறது (படகுகள் கரைக்கு வருதல்…..)   இந்தியவீரனின் முன்னால் நடக்கையில் புறக்காட்சிகளின் விவரணைகள் அவன் அகமனம் மூடிக் கொள்வதன் அடையாளம்.  மறுவாசிப்பைக் கோரும் நாவல்.

பிரதிக்கு:

கருப்புப்பிரதிகள் 94442 72500

முதல்பதிப்பு ஜனவரி 2026

விலை ரூ. 120.