சிறுகதை

நீராழம்

இளம் போராளி முள்ளந்தண்டு வரை ஊடுருவிப் பார்ப்பதாகத் தோன்றியதுமே என்னுள் சிறு துணுக்குறல்  எழுந்து வியர்த்தது. பனிக்கட்டிக் குளிராக நிலைகுத்தி நரம்புகளில் ஊடுருவும் சில்லிட்ட பார்வை.  என்னுள்ளே மெல்லிய நடுக்கம் ஊறினாலும் அதை மறைக்கக் குரலை லேசாக உயர்த்தினேன். எனக்கே என் குரல் அருவருப்பூட்டுவதாக இருந்தது. யாரோ இன்னொருவனின் கரகரத்த குரல் போல என்னிலிருந்து பிரிந்து காலடியில் நிழலாக நின்றிருக்கும் பிறிதொருவன் குரல் போல ஒலித்தது. போராளியின் பார்வையில் எந்த அசைவும் இல்லை. என் தடித்த குரல் […]

நீராழம் – நீலம்

என்னுடைய புதிய சிறுகதை நீராழம் நீலம் இதழில் வெளியாகியிருக்கிறது. /என்னிடம் இருந்தது ஏ.கே47. கூடவே சில 7மி.மி. ரவைகளும். அவையும் மிகச் சொற்பமாகவே எப்போதும் இருப்பில் இருக்கும். எண்ணி எண்ணிச் சுட வேண்டும். சுடும் ஒவ்வொரு குண்டின் நினைவுகளையும் குறித்துவைக்கும் குறிப்புக் கொப்பி வைத்திருந்தேன். ஒரு சூடு சுட்டதும் அந்தக் குண்டின் திசையை தாக்கிய இலக்கைக்  கவனமாகக் குறித்துக் கொள்வேன். கணக்குக் காட்ட அல்ல சொந்த நினைவுகளைப் பேண. ஓய்வான நேரங்களில் – அது அநேகமாகக் காவல்

செவ்வாத்தை

01. சாயம் உதிர்ந்து வெளிறிய துணியில் பொதிந்து வைத்திருந்த கல், சிவந்த தணல் துண்டு போல கனன்று எரிந்தது. நொடியில், துணியைப் பொசுக்கிவிடுவது போன்ற மூர்க்கமான தணல். துணியைப் பிரித்து கல்லை எங்கள் முன்னால் வைத்த வைரன், அமைதியாகவும் தீர்க்கமாகவும் அப்பாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். அப்பா, ஒரு நொடி தயக்கத்தின் பின் அதைக் கையிலெடுத்து உள்ளங்கையில் வைத்து மேல் கீழாகத் தூக்கிப் பார்த்தார். அது, அவருடைய கையில் ஒட்டாமல் பாதரசத்துளி போல அங்கும் இங்குமாக அலைந்தது.

வால்

01. ‘டொப்’ என்ற சத்தம் கேட்டுக் கண் விழித்தபோது எங்கிருக்கிறேன் எனத் தெரியாத நல்ல உறக்கத்திலிருந்தேன். விழித்ததும் கூதல் காற்றே முகத்தில் அறைந்தது. கூடவே பிணம் எரியும் கருகல் வாசனையும் நாசியில் கரித்தது.  மூளை மடிப்புகள் விரிய உடல் அதிர்ந்து குளிர்ந்தது. காலை வெய்யிலில் கண்கள் கூசிச் சுருங்கின. எழுந்து அமர விருப்பமில்லாமல் இரு கைகளையும் கோர்த்துக் கால்களினுள் செருகி தோளைக் குறுக்கி சூட்டைத் தேக்கி உடலைக் கதகதப்பாக்கிப் படுத்திருந்தேன். குடலை அறுக்கும் வல்லூறுகளின் அடித் தொண்டை

துண்டு நிலம்

  01. தடுப்பு முகாமிலிருந்து வீட்டிற்கு வந்து சரியாக முப்பது நாட்கள் கழிந்துவிட்டன. துடக்கு நாட்களில் சாமி அறையினுள் புழங்கும் பட படப்புடனே வீட்டினுள்  நடமாட முடிகிறது.  அம்மாவும், அப்பாவும் வேற்று மனிதர்கள் போலவும், இது அயலாரின் வீடுபோலவும், இங்கே நான் வழி தவறி வந்துவிடதாகவும் தோன்றியபடி இருக்கிறது. கண்ணாடிக் குவளையை பட்டுத் துணியால் துடைப்பதுபோல மிக கவனமாக என்னைப் பாவிக்கிறார்கள். உண்மையில் அப்படி இல்லை என்றாலும், அப்பாவிற்கு பதில் செல்லும் போது உள்ளங்கை வியர்த்து, உதடுகள்

Scroll to Top