நோவிலும் வாழ்வு (கவிதைத் தொகுப்பு)

 

 

நோவிலும் வாழ்வு

வசிகரன்

கவிதைகள்

ஆக்காட்டி வெளியீடு

2024

 

கற்பாறைகளை மோதி மோதி ஒவ்வொரு அலையும் நுரைந்தழிவது போல் மொழியைக் கவிதைகள் இளக்குகின்றன. வசிகரன் கவிதைகளுக்குள் மோதும் அலைகளின் இடைவிடாத தீவிரம் கற்பாறையில் உப்பெனப் படிகிறது. அவரின் கவியுலகில் உருக்கொள்ளும் உடல்களும் நிலவுருக்களும் ஏற்கனவே ஈழத்தில் புழக்கத்தில் இருக்கும் கவியுலகுகளில் இருந்து பிறிதான ஒரு கரையை நோக்கியிருக்கிறது. அன்றாட வாழ்வின் இருளுலகுகளுக்குள் குத்தி ஏறி இறங்கும் சிறு படகென அவரால் நுழைய முடிகிறது. திசைமானியில்லாத அப்படகை யாருக்கும் தெரியாமல் கரையிலிருந்து எடுத்து வந்த சிறுவனைப் போல் தான் விரும்பிய திசைகளிலெல்லாம் செலுத்திப் பார்க்க இயல்கிறது. ஒரு கையைக் குவித்து மறு கையால் தீ மூட்டி பீடியைப் பற்ற வைக்கும் அச்சிறுவனுக்கு முடிவற்ற பெருங்கருணை எறிக்கும் முழுநிலா நாளில் அலைவிளிம்பின் நுரைச்சிரிப்பெனக் கூர் கொண்ட வரிகளை அளிக்கின்றன கடலும் நகரமும்.

– கிரிசாந்

 

 

 

Scroll to Top