ஆக்காட்டி

நோவிலும் வாழ்வு (கவிதைத் தொகுப்பு)

    நோவிலும் வாழ்வு வசிகரன் கவிதைகள் ஆக்காட்டி வெளியீடு 2024   கற்பாறைகளை மோதி மோதி ஒவ்வொரு அலையும் நுரைந்தழிவது போல் மொழியைக் கவிதைகள் இளக்குகின்றன. வசிகரன் கவிதைகளுக்குள் மோதும் அலைகளின் இடைவிடாத தீவிரம் கற்பாறையில் உப்பெனப் படிகிறது. அவரின் கவியுலகில் உருக்கொள்ளும் உடல்களும் நிலவுருக்களும் ஏற்கனவே ஈழத்தில் புழக்கத்தில் இருக்கும் கவியுலகுகளில் இருந்து பிறிதான ஒரு கரையை நோக்கியிருக்கிறது. அன்றாட வாழ்வின் இருளுலகுகளுக்குள் குத்தி ஏறி இறங்கும் சிறு படகென அவரால் நுழைய முடிகிறது. […]

ஆக்காட்டி 18

ஆக்காட்டி 18 அச்சில் இருக்கிறது. தமிழகத்தில் இடப்பட்டிருக்கும் இரண்டுவார கால நாடங்கினால் இதழ் அனுப்பிவைப்பது தாமதமாகியிருக்கிறது. இதழில் வெளியாகிய படைப்புகள்.

ஆக்காட்டி 14

ஆக்காட்டி 14வது இதழ் வெளிவந்திருக்கிறது. ஓரிரு வாரங்களில் இலங்கை, மற்றும் பிரான்ஸில் கிடைக்கும். இந்தியாவில் இதழ் வேண்டும் நண்பர்கள் ‘கருப்புபிரதி’ நீலகண்டனைத் தொடர்புகொள்ளலாம். இந்த இதழில் தோழர் சுகனின் விரிவான நேர்காணல் வந்திருக்கிறது. இலங்கைச் சூழலில் தொடர்ந்து தலித்திய உரையாடலைச் செய்துவருபவர் சுகன். இவர் புகலிடச்சூழலில் விரிவாக உரையாடப்பட்ட மூன்று தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கிறார். ‘தமிழர் என்ற கட்டமைப்பே வன்முறை சார்ந்த மேற்சாதியக் கட்டமைப்பு’ எனச் சொல்லும் சுகன் இஸ்லாமியரைப் போலவே தலித்துகளும் பேரம் பேசும் அரசியல் சக்தியாகத்

Scroll to Top