சிறகை : ஒரு வாசிப்பு அனுபவம்

வணக்கம் தர்மு,
உங்கள் சமீபத்தைய “புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும்” கட்டுரை படித்தேன் அதில் சமகால ஈழ இலக்கியத்தின் பல போதாமைகளைக் குறிப்பிட்டிருந்தீர்கள்.  உலக இலக்கிம்  எவ்வாறான  இடத்தில் இருக்கிறது.  ஈழ இலக்கியம் பிச்சை எடுப்பது போல “ஈழம்” எனும் பெயரை வைத்து உருட்டி இலக்கியம் எனும் கலையைக் கொச்சைப் படுத்துவது மிகவும் பரிதாபத்திற்குரிய விடயம் என நானும் நினைக்கின்றேன். கலைக்கு எந்த ஒரு அடைமொழியும் தேவை இல்லை இடமோ, காலமோ அற்று அதனளவில் உச்சம் அடைவதுதான் அதன் வேலை. சிறந்த ரசிகரால் மட்டுமே சிறந்த கலைப் படைப்புகள் உருவாக முடியும். அந்த வகையில் “சிறகை” குறுநாவல் அதன் உச்சத்தை அடைந்துள்ளது.

சிறகை வாசிக்க தொடங்கிய எனக்கு அதன் தன்னிலை, நிகழ்காலக் கதை சொல்லல் முறை புதிதாக இருந்ததால் ஆரம்பத்தில் விந்தையானதாக  உணர்ந்தேன். இரண்டாம் பக்கத்தில் இருந்தே மொழியும் கதை ஓட்டமும் என்னை முழுமையாக உள்ளிழுத்து கொண்டது. குறுநாவல் முடிவது வரை எந்ந இடத்திலும் விலக்கத்தை உணரவில்லை. நுண்மையான கால இட சித்தரிப்புகளையும் பண்பாட்டு கூறுகளையும் பக்கச் சார்பற்ற முறையில் ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய தனி மனித அடிப்படை கேள்விகளை அடுக்கிக்  கதை நகர்ந்து சிறந்த வாழ்பனுவத்தை “சிறகை” தந்தது. இழப்புக்களையும் புலம்பல்களையும் நிறைத்து பொதுவான உணர்வலைகளுக்குள் சிக்காமல் ஈழ விடுதலைப் போராட்டத்தை சித்தரித்து சலிப்பை உண்டாக்காமல் இருந்தது நாவலின் சிறப்பெனக் கருதுகிறேன்.

நாவலில் என்னைக் கவர்ந்த விடயங்கள்:

  • சித்திரை முகாமில் அம்மானுடனான உரையாடல்களும், குளக்கரையில் சிவப்புடனான உரையாடல்களும் தத்துவார்த்தமான கேள்விகளுடன் அமைந்தது சிறப்பு.
  • இரண்டாம் அத்தியாயத்தில் அம்மாவின் கதையும், சிறகைப் பறவைகளின் சித்தரிப்பும்  அழகு.
  • பிரான்ஸ் சென்றவனின் கதையின் அங்கதம் அருமை.
  • இறுதி அத்தியாயம் நெருடலாக இருந்தது.

நாவலின் முன்னுரையில் குறிப்பிட்ட சிறுகதைகளையும் பின்னர் உங்கள் பக்கத்தில் வாசித்தேன். நான் இனி பின்தோடரப்போகும் சமகால எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர்.

சிறந்த இலக்கிய ரசிகனிடமிருந்து சிறந்த படைப்புகளை எதிர்பார்த்து.

அன்புடன் மாக்கி. 

***

 

புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும்.

புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும்

சிறகை (குறுநாவல்) முன்னுரை.

சிறகை : வெண் மத்தகக் குவியல்

சிறகை குறுநாவலை இணையத்தில் வாங்க
https://www.commonfolks.in/books/d/sirakai