நினைவுகளின் சிறகில் பறக்கும் ஒரு நாவல் ‘சிறகை’ – ப.பார்தீ

தசரதனுக்கு ஆயிரம் பெண்டாட்டி இரமன் செந்த மனைவியில் சந்தேகப்பட்டு தீக்குளிக்கவைத்து காட்டுக்கனுப்பி கொடுமைசெய்தவன் கடவுள் அட கடவுளுக்கு கடல் கடக்கதெரியாமல் குரங்கு உதவி இவற்றையெல்லாம் நம்பி கும்பிடும் உங்களுக்கு சம்பவங்கள் உண்மைகளாகவும் நியாயங்கள் தப்பிதலாகவும் வைத்திருக்கும் இலக்கிய உலகில் ஒரு இலக்கியப் படைப்பின் மதிப்பு அது சொல்லும் கதையில் மட்டும் இல்லை. அது வாசகரிடம் எழுப்பும் கேள்விகளிலும், சமூகத்தை தன்னைத் தானே மறுபரிசீலனை செய்யத் தூண்டும் ஆற்றலிலும் இருக்கிறது. அந்த …

சிறகை (குறுநாவல்) – வாசிப்பனுபவம் : லலிதகோபன்

எழுத்தாளர் தர்மு பிரசாத் அவர்களின் “சிறகை” குறுநாவலின் முதலாவது வாசிப்பு நிறைவுற்றது.உறைந்து கிடக்கும் காலத்தின் மீது மெழுகுத்துணி ஒன்றை இட்டு பிம்பங்களை உருவாக்குவது போல், இந்த நாவலின் களமும்” இன்னமும் முற்றுப்பெறாத” ஈழப்போரின் ஓர் படிமம்தான். ஆனாலும் ஓர் வாசகனாய் இது ஓர் சமகால பிரதியாய் எனக்குள் விரிகிறது. “சமகாலம்” என்ற பதத்தினூடே நெளிகின்ற பாம்பாய் இருக்கும் காலம் எனக்கு புறத்தே இருப்பது அல்ல;அது என் அகத்தினுள்ளே படம் எடுக்கும் …

சிறகை : ஆவேசமான ஒரு பறத்தல் – கிரிசாந்

ஈழத்து இலக்கியத்தில் புனைவுகள் மீதிருக்கும் அடிப்படையான சிக்கல்கள் மூன்று. முதலாவதான சிக்கல், புனைவுக்கான மொழியின்மை. இதைச் சுட்டிக் காட்டும் பொழுது பலரிடமும் குழப்பமான முகபாவனைகளையே எதிர்கொண்டிருக்கிறேன். என் சின்ன வயது முதல் ஈழத்துப் புனைவுகளைக் கண்டு ஓட்டமும் நடையுமாய் தப்பி ஓடிய நினைவுகள் வருகின்றன. தோராயமாக பத்து, பன்னிரண்டு வருடங்களாக புத்தக வெளியீடுகள், உரையாடல்களில் பங்கு பற்றியிருக்கிறேன். தலைப்பாடாய் அடித்து இதெல்லாம் இலக்கியமே இல்லை என பல உதாரணங்களைக் காட்டி …

சிறகை : ஒரு வாசிப்பு அனுபவம்

வணக்கம் தர்மு, உங்கள் சமீபத்தைய “புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும்” கட்டுரை படித்தேன் அதில் சமகால ஈழ இலக்கியத்தின் பல போதாமைகளைக் குறிப்பிட்டிருந்தீர்கள்.  உலக இலக்கிம்  எவ்வாறான  இடத்தில் இருக்கிறது.  ஈழ இலக்கியம் பிச்சை எடுப்பது போல “ஈழம்” எனும் பெயரை வைத்து உருட்டி இலக்கியம் எனும் கலையைக் கொச்சைப் படுத்துவது மிகவும் பரிதாபத்திற்குரிய விடயம் என நானும் நினைக்கின்றேன். கலைக்கு எந்த ஒரு அடைமொழியும் தேவை …

காத்திருப்பு – தமிழ்நதி – கபாடபுரம்

காத்திருப்பு – தமிழ்நதி – கபாடபுரம் கபாடபுரத்தில் வெளிவந்த தமிழ்நதியின் சிறுகதை காத்திருப்பு வாசித்தேன். அதன் மொழி, சொல் முறை குறித்து கவனம் செலுத்தவில்லை எனிலும் அதன் உள்ளடக்கம் குறித்து உரையாட முடியும். நாம் எவ்வளவு தூரம் ஒடுங்கிய சிந்தனையும், புரிதலுமாக இந்த முப்பது வருட யுத்தத்தைக் கடந்து வந்திருக்கிறோம் என்பதைக் குறித்த உள்ளடக்கமது. இந்த முப்பதுவருடப் போர் அனுபவங்களிலிருந்து எதையும் அறிந்து கொள்ளவில்லையோ எனத் தோன்றுகின்றது. இன்று போர் …

சல்வீனியா

பஷீரின், மஜீத்திடம் ஒன்றும் ஒன்றும் எத்தனையென ஆசிரியர் கேட்கிறார். அவன் கொஞ்சம் பெரிய ஒன்று என்கிறான். பிரிந்து கிடக்கும் இரண்டு ஆறுகள் சேர்ந்து பெரிதாகுவதை ஊர்க் கோடியில் பார்த்திருக்கிறான் மஜீத். பஷீரின் கதைகளில்,  பிரிந்தும் பிளந்தும் கிடப்பவை பிணைந்துகொள்ளும் இரசவாதம் நிகழ்கின்றது. பஷீரின் சிறுவர்கள் தனியான உடைந்த மீமொழியும், பார்வையுமுள்ளவர்கள். அவர்களுடைய உலகில் கோணல்களும் அழகாகிவிடுகின்றன. ஆனால் அம்பரய ’சுமனே’ சிறுவனாகவும், வளர்ந்தவனாகவும் இருக்கிறான். ஊராருக்குக் கோணலாகவும் ஊராருடன் எதிர்வினைபுரிபவனாகவும் …