வாழ்க்கைக்குத் திரும்புதல் – அறிமுக நிகழ்வு

  காலம் என்பது இருளிலிருந்து ஒளிக்கும் ஒளியிலிருந்து இருளுக்குமாய் தாவுகின்ற ஒரு குரங்கு. இந்தக் குரங்கினை கிளைகளிலிருந்து அகற்றிவிட்டால் எஞ்சி நிற்பது மொட்டை வெளிச்சம் இல்லாவிடின் பட்டை இருள். சமயங்களில் நம்மை வலிந்து இருளுக்குள் திணித்து கொள்கையில் அங்கே பரா வெளிச்சங்களாக உங்களைத் துலக்குபவை கவிதைகள் எனலாம். இந்தப் பரா வெளிச்சத்தை யாரோ ஒருவர் ஏவியிருக்கலாம். ஆனால் துலங்கும் அதன் ஒளியில் வாசிக்கப்படுவதாக உங்களின் அகம் அமைந்து விடுகிறது. என்ன இது கவிதை என்பது வாசகன் வாசிப்பதுதானே, […]

மூர்க்கரொடு முயல்வேனை 2

என்னுடைய எதிர்வினைகளும் கருத்துகளும் ஏன் உரையாடல்களும் கூட மதுரன், சன்சிகன் போன்ற அறியாமையின் மூடர்களுடன் இல்லை. இந்த வசையர்களுடன் உரையாடுவதில் அர்த்தமோ, பிரயோசனமோ இல்லை. ஒரு விடயத்தைக் கிரகிக்க இயலாதவர்களுடன் என்ன உரையாடல் செய்ய முடியும்? கொஞ்சம் வாசிப்பும் எழுத்துப் பரீட்சியமும் இருந்தாலே இவர்களிடம் வெளிப்படும் அறியாமையின் மூர்க்கத்தை அறிந்து கொள்ள முடியும். இவர்களால் சிறு கட்டுரையையோ அதன் மையக் கருத்தையோ வாசித்துக் கிரகித்து தங்கள் எண்ணங்களைத் தொகுத்து முன்வைக்க முடியாது. என்னுடையது மிகச் சிறிய கட்டுரை.

மூர்க்கரொடு முயல்வேனை

//  இன்றைய செய்திகளின் தொகுப்பு !  சோபாசக்திக்கு தன்னறம் விருது வழங்கியிருக்கிறது. ஒடுக்கப்படுபவர்களுக்காக ஒலிக்கும் குரல் சோபாவினதாம்.  நண்பர் கிரிசாந்தின் சமீபத்திய பேச்சுக்களில் இந்துத்துவ வாடை அடிப்பதாக அடிக்கடி நண்பர்கள் விசனப்பட்டுக்கொள்கிறார்கள்.  தன்னறம் சிவராஜ் ஒரு கடும் இந்துத்துவா என்பது இலக்கிய நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும். நண்பர் கிரிசாந்தின் புத்தக அச்சாக்க பணிகளை முழுமையாக செய்து கொடுத்தது தன்னறம். சிவராஜ் மற்றும் தன்னறம் ஜெயமோகனின் B team என்பது எழுத்தாள, இலக்கிய வட்டங்களில் பேசுபொருள். ஜெயமோகனை தீவிரமாக

நோவிலும் வாழ்வு உரைகள்

வசிகரனின் நோவிலும் வாழ்வு கவிதைத்தொகுப்பு 03.11.2024  யாழ்ப்பாணம் காலைத்தூது அழகியல் கல்லூரியில் வெளியீடு செய்யப்பட்டது. அதன் தலைமையுரையில் கருணாகரன் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். பலரும் உணர்ந்து கொண்ட விடயம்தான் என்றாலும் திரும்பத் திரும்பச் சுட்ட வேண்டியிருக்கிறது. ஈழத்தில் இலக்கியக் கருத்துகள், விமர்சனங்கள், பார்வைகளை விரிவாக யாரும் முன்வைப்பதில்லை. வாசிக்கும் பலரும் கள்ள மெளனம் சாதிக்கிறார்கள் என்றும், அது கடக்கப்படவேண்டியதொரு நிலை என்றும் சுட்டியிருந்தார். உரையில்  பேஸ்புக்கிலாவது சிறுகுறிப்புகளாக வாசிப்பை முன்வைக்க வேண்டுமெனக் கேட்டிருந்தார். இந்த மெளடீகம் சில

நோவிலும் வாழ்வு வெளியீடும் உரைகளும்.

வசிகரனின் நோவிலும் வாழ்வு கவிதைத்தொகுப்பு 03.11.2024  யாழ்ப்பாணம் காலைத்தூது அழகியல் கல்லூரியில் வெளியீடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வின் பதிவு. நோவிலும் வாழ்வு கவிதை நூலை இலங்கையில் பெற்றுக் கொள்ள : https://venpaa.lk/book/novilum-vazvu

Scroll to Top