நஞ்சுண்டகாடு : முரண் உரையாடல்களுக்கான வெளி

நஞ்சுண்டகாடும்  புலம்பெயர்  இலக்கிய  வெளியும் வணக்கம்  நண்பர்களே ! இதுவொரு  வித்தியாசமான  புலம்பெயர்  இலக்கியக்கூட்டம் முரண்களின் தொகையாகப்  பல்வேறு  அரசியல் தெரிவுடையவர்களும் வந்திருக்கிறார்கள். இதுவொரு  இனிய தருணம்.  இதில்  நான் நஞ்சுண்டகாடு  குறித்துப்  பேச அழைக்கப்பட்டிருக்கிறேன்.  நஞ்சுண்டகாடு நாவல்  குறித்துப் பேசமுன்னர் விடுதலைப்போராட்டக்காலங்களிலும்,  அது முள்ளிவாய்க்காலில்  மூளியாகச்சிதைக்கப்பட்ட  பின்னரும்  வந்த நாவல்கள் குறித்துத்    தொகுத்துப் பார்த்துவிடலாம். முள்ளிவாய்க்காலின்  பின்னராக விடுதலைப் போராட்டத்தின் தோல்வி  குறித்தும்,  அதன்  போராட்ட  அவலம், அராஜகப்போக்கு, வன்முறையரசியல்  குறித்தும் சில  நாவல்கள் […]

நவீனமும் – எதிர் நவீனமும்

தெழிற்புரட்சியிலிருந்து உருவாகிவந்த நவீனம் மனிதவளர்ச்சியில் கட்டற்ற உடைப்பை நிகழ்த்தியிருக்கிறது. அதிலிருந்து நவீன மனிதனின் பிரச்சனைகளிலே சூழழியற் பிரச்சனைப்பாடுகளும் மிகமுக்கியமாகின்றன. வேட்டைச்சமூகம் தனது நாடோடி வாழ்வைத்துறந்து நிலையாக ஓரிடத்தில் தங்கியிருக்கும் விவசாய வாழ்வினுள் நுழைந்ததிலிருந்து, இயற்கையைத் துன்பம் வளைக்கத் தொடங்கியது. அபரிமிதமாக அகழப்படும் கனிமங்கள், தாதுப்பொருட்கள் மலட்டுத்தனமான நிலத்தை உருவாக்குவது ஒருபுறம் எனில் மறுபுறத்தில் நிலத்தடிநீர், பூமி வெப்பமடைதல், காடழிப்பு என எண்ணிலடங்கா சூழழியற்பிரச்சனைப்பாடுகளினால் நவீன மனிதன் பல புதிய இடர்களைச் சந்திக்க நேர்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் சூறையாடும்

எமக்கு நிகழாதவரை எல்லாமும் வேடிக்கைதான்.

அகரமுதல்வனை முன்வைத்து ஈழத்துச் சீரழிவு இலக்கியமும் தமிழக எழுத்தாளார்களின் அசமந்தப் புன்னகையும்.    இக்கட்டுரையில் இலக்கிய/அரசியற் செயற்பாட்டளர்களின் பெயர் நேரடியாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது அவர்களின் இலக்கியச் செயற்பாடு குறித்த என் துணிபு. பொது வெளியில் அவர்களை தகுதிநீக்கம் செய்து கொள்வதற்கான உள்நோக்கம் அற்றது. இலக்கியத்தின் மீதான கருசனையினால் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனைத் தப்பிதலாக எடுத்துக் கொள்வது அவரவரின் வசதிக்குட்பட்டது. இக்கட்டுரை அகரமுதல்வனின் ஒழுக்கம் / அறம் சார்ந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை. அவர் எழுத்தில் தன்னை என்னவாக

ஃபன்றி(Fandry) – சாதியில் உலர்ந்த நிலம்

(மராத்தியப்படம் ஃபன்றியை முன்வைத்து) சாதியத்தின் வேர்கள் மிக நுண்ணியமானவை. வாழ்வின் சிறு அசைவில் அது தன் வெறுப்பை, வன்மத்தை, பெருமிதத்தை, புறக்கணிப்பை தொடர்ந்து அழுந்தப் பதியவைத்தபடி இருக்கிறது. மனிதன் நவீனமாகிய பின்னர் சாதியமும் தனது புராதன புழுதிபடிந்த காட்டுமிராண்டி மரவுரியை  உதிர்த்துவிட்டு நவீன உடைக்குள் தன் கூரிய கறைபடிந்த பற்களை மறைத்திருக்கிறது. சொந்த இடம் எது? என்று விசாரிப்பதில் தொடங்கி இன்னாருக்கு சொந்தமா? என விசாரிப்பது வரை சாதியத்தின் எச்சங்கள் இங்கும் மிச்சமிருக்கிறது. உலகம் இலந்தைப் பழம்போல

நிலாவரை

தங்கராசு, உணவகம் வந்தபோது அது  பூட்டி இருந்தது. நேற்று மதியம் வரை சன சந்தடியில் அல்லாடிய உணவகம் இன்று எவ்விதச் சலனமும் இல்லாமல் இருந்தது. அதன் கண்ணாடிக் கதவில் புதிதாக வெள்ளைத் துண்டில் அறிவித்தல் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அதில் அடுத்த மாதம் கடை மீளத் திறக்கப்படும் என்ற அறிவித்தல் இருந்தது. உணவகத்தைப் பூட்டியதற்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக்கோரி இருந்தார்கள். தங்கராசுவிற்கு அது  பிடித்திருந்தது. அறிவித்தலை மெதுவாகத் தடவிப் பார்த்துத் தலையை ஆட்டினார். தன்னிடமும் மன்னிப்பு கேட்டிருக்கலாமோ என்று 

Scroll to Top