மஹெல ஜெயவர்தனாவின் மட்டையாட்டத்தில் 2003ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர் முக்கியமானது. அத்தொடரில்அவர் வீழ்ச்சியின் உச்சத்திலிருந்தார். தொடர்ந்துமோசமாக அடித்தாடி ஆட்டமிழந்தார். அவரிடமிருந்த நிதானம் காற்றில் வைத்த கற்பூரம் போல சுவடேயில்லாமல் போயிருந்தது. வெறுமையானவெங்காயப் பெட்டிபோல கடந்தகால வாசம் மட்டுமே வீசினார். பலரும்அவரில் விசனப்படத் தொடங்கிய நேரம். அந்தவிசனங்களின் உச்சமாயிருந்தது, அவுஸ்ரேலியாவுடனானஉலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி. 172 எனும் இலக்கை, 38.1 பந்துப்பரிமாற்றங்களில் (ஷீஸ்மீக்ஷீs) துரத்திய இலங்கை, வெறும்123ஐ மாத்திரமே அடித்துத் தோற்றது. அரவிந்தடீ சில்வாவின் கடைசி ஒருநாள் போட்டி. அவர்“ரான்-அவுட்”டாகி வெளியேறிய போது , மஹெலஆட உள்ளே வந்தார். எல்லோரும்நிமிர்ந்து அமர்ந்தோம். இலங்கைக்குவெற்றியைத் தரக்கூடிய மட்டையாட்டம் மஹெலவிடம் இருப்பதாக நம்பினோம். சங்கக்கராவுடன்இணைந்து அந்த இலக்கை துரத்தியடிக்கும் வல்லமை மஹெலாவிற்கு இருந்தது. அதுவரைஅவர் மீது கொட்டப்பட்ட விமர்சனங்களை எல்லாம் தனது மட்டையால் அடித்துத் துடைக்கும் வாய்ப்பது. ஆனால்அவரோ கில்கிறிஸ்டிடம் ”ரிப்” கொடுத்து வந்த வேகத்தில் ஆட்டமிழந்தார். பணக்காரஅப்பாவின் ஊதரி மகன்போல பொறுப்பில்லாமல் ஆடினார். அத்தொடரில்அவர் மொத்தமாக எட்டுப் போட்டிகளில் இருபத்தியிரண்டு ஓட்டங்களையே எடுத்திருந்தார். இத்தொடர் அவரின் மட்டையாட்ட வரலாற்றில் மிக மோசமான தொடர்.
மஹெலஇலங்கை அணியின் பொற்காலத்தில் அணிக்குள் வந்தவர். அப்போதுஇலங்கை அணியில் சனத் ஜெயசூரியா, மார்வன்அத்தபத்து , அரவிந்தடீ சில்லா, அருச்சுனரணதுங்கா , ரொஷான்மஹானம , முத்தையாமுரளி என ஆளுமைகள் நிறைந்திருந்த சூழல். மஹெலவின்முதலாவது போட்டியும் இலங்கை ரசிகர்களால் மறக்க முடியாத டெஸ்ட் போட்டி. இந்தியாவுடன்கொழும்பு பிரேமதாசவில் நடந்தது. அதில்தான்சனத் 340ம், மஹானம 225ம் அடித்தார்கள். அப்போதையஅதிகூடிய இணைப்பாட்ட ஓட்டம் 576ஐ தம்முள் பகிர்ந்து கொண்டனர். அவ்இணைப்பாட்டத்தை மஹெலவும் , சங்காவும்இணைந்து 2006ல் முந்தினார்கள். கன்னிடெஸ்ட் போட்டியில் மஹெலா 66 ஓட்டங்களைஎடுத்தார். சிறுவனின்துடிப்போடு அவர் அரைச்சதம் கடந்த போது ரசிகர்கள் பலர் அரவரை திரும்பி பார்த்தனர். அதில்நானும் ஒருவன். அப்போட்டியில் மஹெல அடித்த நான்கு ஓட்டங்களில் ஒரு விதநேர்த்தியிருந்தது. நான்குஓட்டங்களிற்கும் , ஆறுஓட்டங்களிற்கு பந்தை விரட்டி அடிப்பது மட்டுமே மட்டையாட்டத்தின் அதி உச்ச திறனென நம்பிய எனக்கு அவரின் ஆட்டம் புதிய அனுபவமாயிருந்தது.
முரட்டுத்தனமாகஅதிரடியாக ஆடிய (சனத்) , அல்லது அநியாயத்திற்கு மெத்தனமாக ஆடிய (அத்தப்பத்து, மஹானாம ) இலங்கைஅணியில் அவர் ஒருவரே ரசிக்கும் படி நிதானமாக ஆடினார்.அவரின் அபாரமான கவர் டிரைவ்களும் (நீஷீஸ்மீக்ஷீபீக்ஷீவீஸ்மீ), ஒன்டிரைவ்(ஷீஸீ பீக்ஷீவீஸ்மீ) அடிகளும்பெரிதும் ரசிக்கப்பட்டன. ஒருசில போட்டிகளிலேயே இலங்கையின் அடுத்த அணித்தலைவர் என எதிர்வு கூறும்படியான ஆளுமைமிக்க ஆட்டம் அவருடையது. நண்பர்கள் சனத்தின் அதிரடியில் லயித்திருக்க , எனக்கோமஹெலவின் எடுப்பான ஆட்டம் பிடித்திருந்தது. இரண்டாயிரங்களின்தொடக்கத்தில் சனத்தின் தலமையில் சில தொடர்களை இலங்கை வென்றது. 96ம் ஆண்டு உலக்கிண்ணத்தின் பின்னர் இலங்கை அணியில் நிகழ்ந்த குறிப்பிடும் படியான அலையிது. மஹெலஉப அணித்தலைவராக இருந்தார். சனத்தின்அதிரடியாட்டமும் , மஹெலவின்நிதானமும் சேர்ந்திருக்க கிடைத்த வெற்றிகள்.
இரண்டாயிரங்களின்ஒரு பொழுதில் இலங்கையின் மத்தியவரிசை ஆட்டம் கண்டது. சனத்அடித்தால் மட்டுமே வெற்றியெனும் மேசமானதொரு நிலை இலங்கை அணிக்கு வந்தது. முதல்விக்கற் 200ல் விழுந்தாலும், 225க்குள்எல்லோரும் ஆட்டமிழந்துவிடும் மிக பலவீனமான மத்தியவரிசை. சீட்டுக்கட்டுகளால் அடுக்கிச் செய்யப்பட கட்டிடம் போலிருந்தது இலங்கை அணி. ராஜாவானசனத்தை அக்கட்டுக்களிலிருந்து உருவினால் மொத்தக் கட்டடமும் பெல பெலவெனச் சரிந்து விடும். அந்தமத்திய வரிசையில் மஹெலவும் பதட்டத்துடன் ஆடினார். அதுவரைஏறுமுகத்திலிருந்த மஹெலவின் மட்டையாட்டம் மெல்லச் சறுக்கத் தொடங்கியது. இலங்கையின்நச்சத்திர வீரர்களின் ஓய்வும் , சிலர்ஆட்டத்திறனில் அந்திம காலத்திற்கும் போனார்கள். துரதிஸ்டவசமாகஇளம் மஹெலவும் ஆட்டத்திறனில் வீழ்ந்தார். மறுபக்கம்சங்கஹாரா புதிய ஆளுமைமிக்க வீரராக வளர்ந்தார்.
ஊதிக்கட்டபட்டிருந்த பலூன் நொடியில் வெடித்துச் சுருங்கிவிடுவது போல மஹெலவின் ஆட்டமும் சுருங்கிப் போனது. 2003ம் ஆண்டு உலக கிண்ணத்தின் பின்னர் அவர் ஒருநாள் அணியிலிருந்து விலக்கப்பட்டார். பத்தொன்பதுவயதில் இலங்கையின் எதிர்காலம் எனும் ஆரூடங்களுடன் வந்த மஹெல தனது இருபத்தி அய்ந்தாவது வயதில் அணியிலிருந்து விலக்கப்பட்டார். இப்படியாகமுடித்து விடலாம் மஹெலவின் மட்டையாட்ட வாழ்வை. ஆனால்அவர் மீண்டு வந்து சாதித்தவைகள் ஏராளம். அவைதான்மஹெல என்னும் ஆளுமையை ரசிகர்களுக்குக் காட்டியது. அதுதான்மஹெலவின் இறுதிப் போட்டியை காண அரங்கில் குழுமிய ரசிகர்களின் எண்ணிக்கையில் காட்டியது. ஒருநாள்போட்டியின் ஆரவாரங்களுடன் நிகழ்ந்தது அந்தக் கடைசி டெஸ்ட் போட்டி. இலங்கையின்மட்டையாட்ட ஆளுமை சனத்திற்கு கூட கிடைக்காத வாய்ப்பது.
மழையடித்தாலும்டெஸ்ட்போட்டி நடக்கும் மைதான ங்களில் ஒதுங்கமாட்டார்கள் இலங்கை ரசிகர்கள். மஹெலஎனும் ஆளுமையை பார்க்க கூட்டமாய் வந்திருந்தனர். அன்றுஅவருடன் சங்காவும் ஆடிக் கொண்டிருந்தார். சச்சின்– டிராவிட்டின் பின்னர் அதிக ஓட்டங்களை பெற்ற இணைப்பாட்ட சோடி இவர்கள். ஒவ்வொருஅடியையும் ரசிகர்கள் கொண்டாடினார்கள். டெஸ்போட்டிகளின்அடையாளமான சோம்பல் உதிர்ந்து வண்ணமயமாகவிருந்தது மைதானம். அந்தக்கடைசிப்போட்டியிலும் மஹெல அரைச்சதமடித்தார்.
மஹெலவிடம் நூதனமானதொரு திறனிருக்கிறது. மட்டைடாட்டத்திற்கு அவசியமானதும் , அரிதானதுமான திறன். இக்கட்டான, பதட்டமான சூழ்நிலைகளின் போதெல்லாம் மிக இயல்பாக நண்பர்களுடன்மட்டையாடுவது போல ரசித்து ஆடுவார். இக்கட்டானதருணங்களில் மட்டுமே அவரிடம் வெளிப்படும் அபாரமான திறன். அந்ததிறனினால் தான் விவி கிண்ணத் தொடரில் (1999) இங்கிலாந்துக்குஎதிராக 111 பந்துகளில்120 அடிக்க முடிந்தது. உலககிண்ண(2007) அரையிறுதிஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சதமடிக்க முடிந்தது. தோல்வியைதவிர்க்க 255 பந்துகளில்54 ஓட்டங்களை எடுக்க முடிந்தது. தனதுமூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்காவிற்கு எதிராக 167 ஒட்டங்கள் அடிக்க முடிந்திருக்கிறது. இப்படிபல இக்கட்டுக்களிலிருந்து இலங்கையை பத்திரமாக கரை சேர்த்த மட்டையாட்டம் அவருடையது. அவர்சதமடித்த பெரும்பாலான போட்டிகளில் இலங்கை வென்றிருக்கிறது. அவர்வெற்றிகளின் பிரதான காரணியாகவும் , ஊக்கியாகவும்இருந்தார்.
நன்றாகஆடிக் கொண்டிருக்கும் போதே ஓய்வினை அறிவித்தார் மஹெல. சீராகப்பறந்த விமானம்சடுதியாக தரையிறங்கி விடுவது போன்றதொருஓய்வு. இங்கிலாந்தில்டெஸ்ட் வெற்றியின் பின்னர், அடுத்தபாகிஸ்தான் தொடருடன் டெஸ்டிலிருந்துஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். மஹெலவின்முதற்போட்டியிலிருந்து அவரை , அவரின்நுணுக்கமான ஆட்டத்திறனை தொடர்ந்து வருபவர்களுக்கு ஆச்சரியமிக்க அறிவிப்பது. அண்மைக்காலங்களில் அவர் பெரிதாக சாதிக்கவில்லை எனினும் மிதமாக அடிக்கொண்டிருந்தார். பதட்டமானதருணங்களில் எல்லாம் மீட்பாளரைபோல ஆட்டத்தை தன்கையிலெடுத்தார். நெருக்கடிகளின்போது தலைவராய் , சக வீரராய் , உப அணித்தலைவராகக் கூடச் செயற்பட்டார். (அதுவும்தன்னிலும் அனுபவம் குறைந்த வீரரின் கீழ்) நாயகபிம்பங்களைஊதிப் பெருப்பிக்கும் மட்டையாடத்தில் இது அரிய ஆளுமைப் பண்பு. கூடவே நீந்தும் நிலவைப் போல அவர் எம் கல்லூரி அரட்டைகளிலும் , விளையாட்டுமைதானங்களிலும் , படுக்கைஅறையின் சுவர்களிலும் தலையில் நீலத்துண்டைக் கட்டியபடி தனது மட்டையை உயர்த்திப் பிடித்து சிரித்துக் கொண்டிருந்தார். இனி மைதானத்தில் பார்க்க முடியாத காட்சியது. ஒருதலைமுறை ரசிகர்களை பாதித்த மட்டையாட்டம் அவருடையது.
மஹெலவின்அதியுச்ச திறனை டெஸ்ட் போட்டிகளிலேயே பார்க்கலாம். ஒருநாள்போட்டிகளில் ஓவ்வொரு பந்திலும் ஓட்டம் எடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஆடுவார். அதுவேஅவரின் ஆட்டமிழப்புக்கு காரணமாகவுமிருக்கும். டெஸ்டில்இருக்கும் நிதானம் ஒருநாள் போட்டிகளில் அவரிடம் ஒருபோதும் இருக்கவில்லை. இதுஅவரின் பலவீனமும் கூட. அதனால்தான் அவரால் ஒருநாள் போட்டிகளில் தன் திறமைக்கு அளவாக சாதிக்கமுடியவில்லை. ஒருநாள் போட்டிகளில் அவரின் சராசரி முப்பதிலும் குறைவாகவே இருக்கிகிறது. இச்சராசரிஒரு மிதமான ஆட்டக்காரரின் சராசரியாகும். நானூறுஒருநாள் போட்டிகள் விளையாடிய சிலரில் அவரும் ஒருவர்.
டெஸ்ட்போட்டிளில் அவர் தன்னியல்பில் பிடித்த ஷெட்களை எடுப்பாய் ஆடினார். கவர்டிரைவ்களில் பந்தை நான்கிற்கு விரட்டினார். ஒன்டிரைவ் களில் முன்னம் காலிலும் , பின்னங்காலில்பிளிக்குகளும் , விக்கற்றுக்குகுறுக்காக வந்து கீப்பரின் பின்னாலும் ஆடினார். மஹெலவின்ஒவ்வொரு டெஸ்ட் ஆட்டத்திலும் எல்லா வித ஷெட்களையும் பயன்படுத்தி ஆடியிருப்பார். ஒவ்வொருமட்டையாட்ட வீரரின் கனவும் இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் ஒரு சதமாவது அடிக்க வேண்டும் என்பது. மஹெலஇரண்டு முறை லோட்சில் சதமடித்துள்ளார்.
நடந்துமுடிந்த இந்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியா மிக மோசமாகத் தோற்றது. அதில்அஸ்வின் மட்டும் நன்றாக ஆடினார். இந்தியாவின்இந்த வீழ்சியின் காரணம் ‘லேட்கட்’ தான். இந்தியவி யாரும் ‘லேட்கட்’டை முயற்சிக்கவில்லை. அஸ்வின்மட்டும் ஓரளவு முயன்று சாதித்தார். பந்தைவிழ விட்டு சில கணங்கள் தாமதித்து மட்டையில் எடுத்து விளையாடுவது. இந்த‘லேட் கட்டில் மஹெல தேர்ந்தவர். மஹெலவின்மிகப்பெரிய பலமும் ‘லேட்கட்’தான். அவர்பந்தை விட்டு பொயின்ற் திசையிலும் , தேர்ட்மான் திசைக்கும் நொடியில் பந்தை விரட்டும் சொடுக்குகள் அபாரமானவை. சுழற்பந்திற்குமுன்னால் வந்து ‘ஓவர்எஸ்ரா கவரில்’ அடிப்பதும்மஹெலவின் பிரத்தியோக ஷொட். இந்தியாவின்மாஸ்டர் சச்சின் என்றால் இலங்கையின் மாஸ்டர் மஹெல.
மஹெலவைதடுமாற்றி ஆட்டமிழக்கச்செய்ய இரண்டு எளிய வழிகளிருக்கிறது. ஒன்றுபவுன்ஸ் பந்தை வீசி குக் ஷொட் ஆடச் செய்தல். மற்றதுஓப் ஸ்ரம் நோக்கி பந்தை வீசுதல். இந்தஓப் ஸ்ரம்மிற்கு வரும் பந்துகள்தான் மஹெலவின் பலவீனமான புள்ளி. இதனால்தான் தென் ஆபிரிக்காவின் பொலக்கிடமும் , அவுஸ்ரேலியாவின்மக்ராத்திடமும் அதிகமும் ஆட்டமிழந்தார்.
இலங்கைஅணியின் பலமே சுழற்பந்திற்கு ஏற்ப களத்தடுப்பை திறம்பட அடுக்குவதுதான். அதனால்தான் இலங்கையால் சுழற் பந்திற்கு நன்றாக ஆடக்கூடிய இந்தியாவுடன் ஆதிக்கம் செலுத்தி வெல்ல முடியாமல் இருக்கிறது. சுழற்பந்திற்குஏற்ப களத்தடுப்பு வியூகங்களை மாற்றுவதில் மஹெல எல்லோரிலும் தேர்ந்தவர். புதியவியூகங்களை முயற்சிப்பதற்கு தயங்குவதேயில்லை. கடைசிப்பந்துவரையும் முயற்சித்துக் கொண்டிருப்பார்.
மட்டையாட்டத்தைவிட மஹெல ‘சிலீப்பில்’ அதிக பிடிகளையும் பிடித்துள்ளார். அவரும்முரளியும் சேர்ந்து ஆட்டமிழப்பு செய்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். சிலீப்பில்சடுதியாக வரும் பந்துகளை பிடிப்பதற்கு துல்லியமான வேகம் வேண்டும். முரளியின்திரும்பும் பந்துகளின் திசையை கணிப்பது கடினம். அதிலும்பாதி நேரம் முரளியே பந்து வீசிக் கொண்டிருப்பார். டெஸ்ட்போட்டிகள் அதீத பொறுமையைக் கோருபவை. இலவுகாத்தகிளிபோல் காத்திருக்க வேண்டும். ஒவ்வொருகணத்திலும் திருப்பங்கள் வரும். அந்ததிருப்பங்களை ஆட்டமிழப்புக்களாக்கும் மஹெலவின் திறன் தனியானது.
மஹெலஎப்போதும் தன்னை ஆட்டங்களுக்கு ஏற்றவாறு தகவமைத்து கொண்டே வந்தார். ஒருநாள்போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்து சாதித்தார். தேவைகளின்போது அதிகமும் அடித்தாடினார். நான்குஓட்டங்களுக்கு பந்துகளை விரட்டினார். ரி20 போட்டிகளில் அதன் இயல்பிற்கு அடித்தாடினார். மிகஆபத்தான ஷொட்களையும் முயற்சித்தார். பந்துவிழும் திசைக்கு எதிராக மட்டையைத் திருப்பி பின்னால் அடித்தார். தனக்குஉவப்பான மேற்கிந்திய தீவுகளின் மைதானங்களில் அவர் ஆடிய ரீ20 உலகக்கிண்ண ஆட்டங்கள் அபாரமானவை. ரீ20ல் அங்குதான் அவர் சதம் அடித்தார். மூன்றுவகைஆட்டங்களிலும் ரசிகர்களுக்கும் , எதிரணிக்கும், சக வீரர்களுக்கும் கணிசமான தாக்கத்தைக் கொடுத்தார். கடந்தரீ20 உலகக்கிண்ணஇறுதிப் போட்டியில் கிண்ணம் வெல்ல மலிங்காவின் பின்னாலிருந்து ஆலோசனைகள் கூறியவரும் அவரே.
இலங்கைஅணி மீளுருவாக்கம் செய்யப்படும் காலமிது. அணியில்புதியவர்கள் தொடர்ந்து நிலைக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின்புதிய வீரர்களுக்கு எப்போதும் ஓரிரு அனுபவ வீரர்களின் கீழ் சர்வதேசப் போட்டிகள் ஆடிப்பழகும் வாய்ப்பிருக்கும். அப்படித்தான்திரிமனேயும் , சந்திமாலும், குசால் பெரேராவும் ஆடிப் பழகிக் கொண்டிருக்கிறார்கள். இதில்மஹெலவின் பங்களிப்பு மிக முக்கியமானது. புதியவர்கள்மஹெலவுடன் ஆடும் போது மிகத்தெம்பாக மட்டையாடுவதைப் பார்க்கலாம். சந்திமால்மஹெலவுடன் ஆடும் போது அவருடைய வழமையான பதட்டம் நீங்கி இயல்பாய் ஆடுவார். இனிமஹெலவின் இடத்தை நிரப்ப வேண்டியவரும் அவரே. ஆனால்அவரோ மோசமாக ஆடிக் கொண்டிருக்கிறார். ஆனால்எதிர்பார்த்த விட இலங்கை அணியின் தலைவர் மத்தியூஸ் அபரமாக ஆடுகிறார். போட்டிகளைவெல்லக்கூடிய மட்டையாட்டமிருக்கிறது அவரிடம்.
இங்கிலாந்தில்ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று தொடரைச் சமப்படுத்தினார்கள். இலங்கையில்பாகிஸ்தானை 2:0 என வீழ்தினார்கள். இதில்மஹெலவின் பங்கு கணிசமானது. மஹெலஅடுத்த உலக கிண்ணம் வரைக்கும் டெஸ்ட் போடிகளிலும் ஆடியிருக்கலாம். ஆனால்முப்பத்தைந்து ஓவர்களின் பின்னால் அடித்தாட அவசரப்பட்டு ஆட்டமிழப்பது போல டெஸ்டிலிருந்து பாதியில் ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள்போட்டிகளில் அடுத்த உலகக்கிண்ணம் வரையும் ஆடுவார்.
இலங்கையின்போட்டிகளை ஒரு வித குற்றவுணர்வுடனே ரசிக்க வேண்டியிருக்கிறது. எண்பதுகளின்பின்னர் பிறந்த பலரிற்கும் இருக்கும் இரட்டைமனநிலையிது. இலங்கையின்போட்டிகளை ரசித்துக் கொண்டு, இலங்கைஅரசின் இனப்படுகொலையையும் எதிர்கொள்ள வேண்டிருக்கிறது. சங்காவும், மஹெலவும் சர்சைக்குரிய கருத்துக்களைச் சொன்னவர்கள்தான். பெரும்பான்மையினரிடமிருக்கும் இனவாதக்கண்ணாடியையே அவர்களும் அணிந்திருக்கிறார்கள். இலங்கையில்விளையாட்டே அரசியலாகவும் அரசியலே விளையாட்டாகவும் பிணந்துள்ள நிலையில் இது முரன்ரசனை.
***
ஆக்காட்டிசெப்ரெம்பர் மாத இதழில் வெளியாகிய கட்டுரை