விண்மீன்களின் இரவு
01. இவன் அந்தத் தடிமனான கண்ணாடிக் கட்டிடத்தை விட்டு எழுந்து ஓடிவிட நினைத்தான். ஹீற்ரர் வெப்பம் பிடரி, காதுமடலின் பின்புறம் எங்கும் கொதித்தது. பல சோடிக்கண்கள் தன் பிடரியில் மொய்த்திருப்பதை நினைத்துப் பார்த்தான். தனது உடல் கேள்விகளால் துகிலுரிந்து நிர்வாணமாவதைப் பதட்டத்துடன் எதிர்கொண்டான். ஒவ்வொரு கேள்வியும் துப்பாக்கி ரவைகளை விட அதிக ஆழத்தில் அவனைத் துளைத்தன. உச்சமாக அவனுடைய அக்காவைப்பற்றிக் கேட்டது நீலப்படத்தின் சில துண்டுக் காட்சிகளை நினைப்பூட்டியது. சிப்பாயின் உள்ளாடையின் நிறத்திலிருந்து அக்காவின் முனகல்வரை விபரித்தான். […]