நிறமழியும் வலிமையற்ற உடல்கள்
ராகவனின் மூன்று கதைகள் ராகவனின் மூன்று புதிய சிறுகதைகளின் களமும் போரின் பின்னரான யாழ்ப்பாணம். அவருடைய ஆரம்பகாலச் சோதனை முயற்சிக் கதைகளிலிருந்து புதிய கதைகளின் மொழியும், உள்ளடக்கமும் உருமாறி வந்திருக்கின்றன. ஆரம்பகால அறிக்கையிடும் கட்டிறுக்கமும், பிசிறில்லாத தன்மையுடனிருந்த மொழி வட்டார வழக்கைப் பிரதிசெய்யும் விதமாக உருமாற்றம் அடைந்திருக்கிறது. அவர் முன்வைக்கும் கதை மாதிரிகள் தமிழிற்குப் புதியவையல்ல. ஆனால் யுத்தச் சிதிலங்களைச் சுமந்தலையும், தன் முதுகில் கலாசாரப் பழைமைகளைப் பெரும்பாரமாகக் கட்டிச் சுமக்கும் யாழின் சிதறுண்ட சமூகச் சட்டகத்தை […]