நீராழம் – நீலம்

என்னுடைய புதிய சிறுகதை நீராழம் நீலம் இதழில் வெளியாகியிருக்கிறது.

/என்னிடம் இருந்தது ஏ.கே47. கூடவே சில 7மி.மி. ரவைகளும். அவையும் மிகச் சொற்பமாகவே எப்போதும் இருப்பில் இருக்கும். எண்ணி எண்ணிச் சுட வேண்டும். சுடும் ஒவ்வொரு குண்டின் நினைவுகளையும் குறித்துவைக்கும் குறிப்புக் கொப்பி வைத்திருந்தேன். ஒரு சூடு சுட்டதும் அந்தக் குண்டின் திசையை தாக்கிய இலக்கைக்  கவனமாகக் குறித்துக் கொள்வேன். கணக்குக் காட்ட அல்ல சொந்த நினைவுகளைப் பேண. ஓய்வான நேரங்களில் – அது அநேகமாகக் காவல் பணியின்  அலுப்பூட்டும் பின்னிரவுகளாக இருக்கும்-  அந்தக் குருதிக்கறை படிந்த குறிப்புக்களில் தங்கிவிட்ட தருணங்களைத் திரும்பவும் நினைவுகூர்ந்து பார்ப்பேன். ஏதும் பெரிதாக நினைவில் இருக்காது. மழுங்கலாக வேறு யாருக்கோ நிகழ்ந்தவை போல பழுப்பாகவே நினைவில் அவை எஞ்சியிருக்கும். அதுவும் மிகச் சொற்பமாக. நிகழ்வுகளின் தொடக்கமோ முடிவுகளோ கூடச் சுத்தமாக நினைவில் இருக்காது. நினைவுகள்  எங்களை மோசமாக வஞ்சிக்கக் கூடியவை. அவற்றுக்கு இருப்பது பேய்களுக்கான ஆன்மாவும் உயிரும். பீடித்துக் கொண்டால் உக்கிரமாக எம்மைப் பிடித்தாட்டக் கூடியவை. அழிந்த மழுங்கல் நினைவுகளை மீட்க மனம் சலித்துப் பெரும் பித்துடன் ஆழ் உள்ளத்துள் தேடியபடியே இருக்கும். அதிலும் போர்க்கள நினைவுகள் தனியான உதிரி நினைவுகளாக ஒருபோதும் மீட்கவே முடிவதில்லை. அவை கூட்டான கனவுகள் போன்றே நினைவுகளில் எஞ்சியிருக்கும். குழம்பிச் சிக்கலாகி இன்னொன்றுடன் பிணைந்து இருக்கும். எவ்வளவுதான் துல்லியமாக் குறித்துவைத்தாலும் என்னுடைய நினைவை அவற்றுள்ளிருந்து தனியே பிரித்தெடுக்கவே முடிவதில்லை.  /

சிறுகதைக்கான இணைப்பு கீழே.
https://theneelam.com/dharmu-pirasath-short-story/

Scroll to Top