வெள்ளிவீதி

இது வெள்ளிவீதியின் இரண்டாவது நிகழ்வு. முதல் நிகழ்வு பரிஸில் 12 யூலை நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்வு முடிந்ததும் எல்லோருக்கும் எழுந்த நிறைவின் விசையே அடுத்த நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கிறது. வழமையான விமர்சனக் கூட்டங்களின் போதாமைகள் உணர்ந்தவை தான். ஆனால் அவற்றை மீற முடியாமல் ஒரு சடங்குபோல நிகழ்த்திக் கொண்டிருந்தோம். கூடவே நமக்கு ஒரு நிகழ்வின் அடிப்படை புரிவதில்லை.  பெரும்பாலும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு, விமர்சனக் கூட்டங்களுக்கும் வித்தியாசம் அறிந்து கொள்ளமுடியாமல் …

வெள்ளிவீதி – இலக்கியக் கூடுகை

சிறிய இலக்கியக் கூட்டங்கள் குறித்து ஓர் அவநம்பிக்கை இருக்கிறது. அது இக் காலகட்டத்தில் பலருக்கும் எழும் சந்தேகம். சமூக வலைதளங்கள் என்ற பெரிய வெளி இருக்கும் போது இலக்கியக் கூட்டங்களை ஏன் மிகச் சிறியதாக சொற்ப நபர்களுடன் நிகழ்த்தவேண்டும்? அதனால் என்ன பயன்? ஒத்த ரசனை, ஒத்த அறிவுத்திறனான நண்பர்கள் மட்டுமே கூடி கலையுமிடமாக மட்டும் அது ஏன் இருக்க வேண்டும்? அப்படியான சிறு கூட்டங்களால் அறிவுத்தளத்தில், பண்பாட்டு வெளியில் …

கே. டானியல்: யாழ்ப்பாண பண்பாட்டின் நுட்பமான வெளி – தர்முபிரசாத்

கே.டானியல் ஈழ இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர். யாழ்ப்பாணச் சமூகப் பண்பாட்டு வெளியை எழுதியவர்களுள் மிக முக்கியமானவர். அவரளவுக்கு நுட்பமான பண்பாட்டுக் கூறுகளுடனான சமூகச் சித்திரத்தைத் தங்கள் புனைவுகளில் மிக விரிவாகவே எழுதியெடுத்திருப்பவர்கள் ஈழத்தில் மிக அரிது. அதிலும் யாழ்ப்பாணத்தில் சொற்பம்.  கே.டானியல் அளவிற்கு யாழ் சமூகத்தை விரிவாக எழுதியிருக்கும் இன்னொருவர் எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ).  இவர்கள் இருவரது படைப்புகளிலும் யாழின் பண்பாட்டு அகம் ஒன்று உயிர்ப்புடன் விழித்திருக்கிறது. இருவரும் எழுதியிருப்பது நாம் …

வாழ்க்கைக்குத் திரும்புதல் – அறிமுக நிகழ்வு

  காலம் என்பது இருளிலிருந்து ஒளிக்கும் ஒளியிலிருந்து இருளுக்குமாய் தாவுகின்ற ஒரு குரங்கு. இந்தக் குரங்கினை கிளைகளிலிருந்து அகற்றிவிட்டால் எஞ்சி நிற்பது மொட்டை வெளிச்சம் இல்லாவிடின் பட்டை இருள். சமயங்களில் நம்மை வலிந்து இருளுக்குள் திணித்து கொள்கையில் அங்கே பரா வெளிச்சங்களாக உங்களைத் துலக்குபவை கவிதைகள் எனலாம். இந்தப் பரா வெளிச்சத்தை யாரோ ஒருவர் ஏவியிருக்கலாம். ஆனால் துலங்கும் அதன் ஒளியில் வாசிக்கப்படுவதாக உங்களின் அகம் அமைந்து விடுகிறது. என்ன …

நோவிலும் வாழ்வு வெளியீடும் உரைகளும்.

வசிகரனின் நோவிலும் வாழ்வு கவிதைத்தொகுப்பு 03.11.2024  யாழ்ப்பாணம் காலைத்தூது அழகியல் கல்லூரியில் வெளியீடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வின் பதிவு.   நோவிலும் வாழ்வு கவிதை நூலை இலங்கையில் பெற்றுக் கொள்ள : https://venpaa.lk/book/novilum-vazvu