தனிமையின் நூறு ஆண்டுகள்

அக்கா சந்திவேம்பில் சாரத்துணியால் கைகள் கட்டப்பட்டிருந்தபடி போராளிகளின் துப்பாக்கியை நெஞ்சிற்கு நேரே எதிர்கொண்டபோது நெடுநாளைக்கு முந்திய மூன்று கோடைகளை நினைத்துக்கொண்டாள். முதற் கோடை; அடித்தோய்ந்த மழையில் நனைந்து, திரி திரியாகப் புகைந்தபடியிருந்த அவ்ரோ விமானத்தின் துலக்கமான வடிவம் அலுமினியத்தின் பளபளப்பில் அக்காவிற்கு நினைவில் வந்தது. அவ்ரோ விமானம் வாழைமரங்களை முறித்து வீழ்த்தி வாழைத் தோட்டத்தின் நடுவில், உடைந்த வெள்ளை முட்டையோடு போல சிதறிக் கிடந்தது. அதனைச் சுற்றி முறிந்திருந்த வாழை மரங்களின் இலைகள் தீயில் கருகியிருந்தன. கறுப்புப் […]

காத்திருப்பு – தமிழ்நதி – கபாடபுரம்

காத்திருப்பு – தமிழ்நதி – கபாடபுரம் கபாடபுரத்தில் வெளிவந்த தமிழ்நதியின் சிறுகதை காத்திருப்பு வாசித்தேன். அதன் மொழி, சொல் முறை குறித்து கவனம் செலுத்தவில்லை எனிலும் அதன் உள்ளடக்கம் குறித்து உரையாட முடியும். நாம் எவ்வளவு தூரம் ஒடுங்கிய சிந்தனையும், புரிதலுமாக இந்த முப்பது வருட யுத்தத்தைக் கடந்து வந்திருக்கிறோம் என்பதைக் குறித்த உள்ளடக்கமது. இந்த முப்பதுவருடப் போர் அனுபவங்களிலிருந்து எதையும் அறிந்து கொள்ளவில்லையோ எனத் தோன்றுகின்றது. இன்று போர் முடிந்து இன்று நாம் விரும்பியோ விரும்பாமலோ

சல்வீனியா

பஷீரின், மஜீத்திடம் ஒன்றும் ஒன்றும் எத்தனையென ஆசிரியர் கேட்கிறார். அவன் கொஞ்சம் பெரிய ஒன்று என்கிறான். பிரிந்து கிடக்கும் இரண்டு ஆறுகள் சேர்ந்து பெரிதாகுவதை ஊர்க் கோடியில் பார்த்திருக்கிறான் மஜீத். பஷீரின் கதைகளில்,  பிரிந்தும் பிளந்தும் கிடப்பவை பிணைந்துகொள்ளும் இரசவாதம் நிகழ்கின்றது. பஷீரின் சிறுவர்கள் தனியான உடைந்த மீமொழியும், பார்வையுமுள்ளவர்கள். அவர்களுடைய உலகில் கோணல்களும் அழகாகிவிடுகின்றன. ஆனால் அம்பரய ’சுமனே’ சிறுவனாகவும், வளர்ந்தவனாகவும் இருக்கிறான். ஊராருக்குக் கோணலாகவும் ஊராருடன் எதிர்வினைபுரிபவனாகவும் இருக்கிறான். அவனது சிந்தனை, செயலில் முதிர்ச்சியும்

மிக ரகசிய இயக்கம்

01 ஓம் குரு எனக்கும் உங்களுக்கு வந்த சந்தேகமே வந்தது. அவள் கஞ்சாப்புகையின் கதகதப்பில் கதையைச் சொல்லத் தொடங்கிய கையோடு நானும் அவளை இடைமறித்து இதே கேள்வியைத்தான் கேட்டேன். அவள் அலங்க மலங்க முழித்தாள். இன்னொரு கஞ்சாவைத்துச் சுருட்டிய சிகரெட்டினை  பெட்டியிலிருந்து உருவியெடுத்து அதன் வாசனையை ஆழமாக உள்ளிழுத்தாள். பின்னர் அதனை உள்ளங்கையில் வைத்து நீண்ட விரல்களினால் உருட்டினாள். ’இல்லவே இல்லை ஊரிலை எண்ட அப்பாவின் இயக்கம் மிக இரகசிய இயக்கம்’ என்றபடி எழுந்து சென்று என்

கத்னா – மிஹாத்

கிளிட்டோரிஸ் சிதைப்பு விவகாரமானது இன்று தமிழகச் சூழலிலும் புதிய விவாதக் கதவுகளைத் திறந்திருக்கும் நிலையில் அதன் நிஜமான அக்கறைகளுக்குப் புறம்பாக இருக்கும் அதிகார நிகழ்ச்சி நிரலையும் கவனத்தில் கொள்ளாமல் விட்டு விட முடியாது.

Scroll to Top