பூர்வ நிலம் நீங்கிய அயல் நிலக் கதைகள்.

சாதனாவின்  கதைகளை, தொகுப்பாக வெளிவர முன்னரும் வாசித்திருக்கிறேன். தொகுப்பின் அதிகமான கதைகள் (4) ஆக்காட்டியில் வெளியாகி இருக்கின்றன.  வெளியாகிய காலங்களில் இருட்குகைக்குள் பாதுகாக்கப்படும் இரகசியக் கதைகள் போன்ற சொற்பக் கவனிப்பே கிடைத்திருக்கிறது. அதிகம் கவனிக்கப்படாததால் நல்ல கதைகள் எனச் சொல்லும் பக்குவம் இன்னும்   கைவரவில்லை. சாதனாவின் கதைகளின் போதாமைகளையும், அவை நிலம் நீங்கிச் செல்வதின் அர்த்தமின்மைகளையும் கோடிட விழைகிறேன்.

கர்ப்பநிலம் : குணா கவியழகனின் அறியாமையும், அலுக்கோசுத்தனமும்.

The historian will tell you what happened. The novelist will tell you what it felt like – E.L. Doctorow குணாகவியழகனின் கர்ப்பநிலம் நாவலை வாசித்து முடித்த போது அவரை நினைத்து பரிதாபங்கொள்ள மட்டுமே முடிந்தது.  இவரா நஞ்சுண்டகாடு நாவலை எழுதியவர் என்ற சந்தேகமும் வந்தது. இவரின் புனைவுவெழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்ததில் அவற்றிலுள்ள அறியாமையின் மேல் ஒவ்வாமை தான் வருகின்றது. குணா கவியழகனிடமுள்ள சிக்கலென்னவென்றால்,  அவரால் இன்னும் தமிழின் நவீனத்துவத்தையே கடந்துவர

Give it to Angkar

இரண்டாயிரங்களின் பின்னர் தமிழில் நாவல்களே எழுதப்படவில்லை என்று லஷ்மி மணிவண்ணன் அறிவித்திருந்த நாளில் லஷ்மி சரவணகுமாரின் கொமோரோ நாவலை வாசித்து முடித்திருந்தேன். நாவல் கொடுத்த கனதியான மனநிலையில் லஷ்மி மணிவண்ணனின் அந்தக் கூற்று கொமோர நாவலில் அர்த்தம் நிரம்பியதாக கணம் பட்டும் மறைந்தது. தமிழில் எழுதப்படும் ஒரு தொகுதி நாவல்கள் சம்பவங்களின் தொகுப்பாக்கம் மட்டுமே. புனைவின் கட்டற்ற சுதந்திரத்தின் நுனியைக் கூடத் தீண்டாமல் முடிந்துவிடும் எளிய வாழ்க்கைச் சித்திரிப்புகளுடன் மாத்திரம் இருக்கின்றன. நாவல்களில் தமக்கான தனியான கதை

அ.முத்துலிங்கமும் வெள்ளாளச் சாதி உளவியலும்.

“தடம்: ஈழத் தமிழர்கள் மத்தியில் தமிழகத் தமிழர்களிடம் உள்ளதைப் போலவே சாதி என்பது மிக ஆழமாகப் பதிந்துள்ளது. அது புலம்பெயர்ந்தோர் மத்தியிலும்கூட உயிர்த்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அ.முத்துலிங்கம்: உங்களுக்கு தவறான செய்தி கிடைத்திருக்கிறது. ஈழத் தமிழர்கள் மத்தியில் சாதி வித்தியாசம் இருந்தது உண்மைதான். ஆனால் அது ஒருபோதும் வெறியாக மாறியது இல்லை. புலம் பெயர்ந்தபோது சாதியும் புலம் பெயர்ந்தது. ஆனால் ஒரு தலைமுறை கடந்த நிலையில் சாதி வித்தியாசம் எங்காவது அபூர்வமாகவே தென்படுகிறது“

Scroll to Top