பிரபஞ்ச நூல்
‘பிரபஞ்ச நூல்’ ஷோபாசக்தியின் மிக நல்ல சிறுகதைகளுள் ஒன்று. இவை (மாதா, காயா, பிரபஞ்ச நூல்) இவரின் அடுத்த பட்டாம்பூச்சிக் காலத்தின் கதைகள். ஆரம்பத்தில் எழுதிய வட்டார வழக்கு கதைகளில் இருந்து நகர்ந்த நுட்பமும் பகடியும் கூடிய – அவரே சொல்லிக் கொள்வதுபோல் சற்றே நீளமாக்கப்பட்ட அரசியல் துண்டுப்பிரசுர – காலத்திலும் விபச்சாரியைப்* பற்றித் ‘தமிழ்’ என்று ஒரு கதை எழுதி இருக்கிறார். அது அரசியல் அழுத்தப் பின்னணியுடைய கதை. அக்கதை சொல்லிக்கு ஊரில் ஒரு மழை
ஆக்காட்டி ஒருங்கிணைக்கும் சந்திப்பும் உரையாடலும்
‘ஆக்காட்டி’ இதழ் ஒருங்கிணைக்கும் சந்திப்பும் உரையாடலும். எழுத்தாளர் – பரியேறும் பெருமாள் இயக்குனர்.மாரி செல்வராஜ்செவ்வாய் 16 ஏப்ரல் மாலை 5 மணி.
நாதனின் நேசமிகு விழிகள்.
காலச்சுவடு ஏப்ரல் 2019-ல் வெளியாகியிருந்த ‘நாதனின் நேசமிகு விழிகள்’ சிறுகதை ( ருவான் எம்.ஜயதுங்க (சிங்களம்), தமிழில் / எம்.ரிஷான் செரீப்)இது ஒரு மேம்போக்கான கதைதான். பத்திரிகை செய்திகளின் மூலம் எழுதப்பட்ட ஒரு கதையாக கொள்ள இயலும். தினசரிபத்திரிக்கைகளில் வாசிக்கும் சிங்கள மக்களுக்குக்கான கதை. நாதனையும் தகப்பனையும் ஒப்பீடு செய்யும் இடம் ஒரு பொருளாதர அகதிக்கான இடமா? நாதன் அவ்வாறில்லையே…. மற்றபடி 83 கலவரம் காப்பற்றப்பட்டது… லண்டன் காசு, கன்னத்த கடிக்கிறது லண்டனில எல்லா இனங்களும் ஒன்றாக
நடுகல் : இனவாதக் காட்டாற்றின் நீரோட்டத்தால் வழுவழுப்பாக்கப்பட்ட கூழாங்கற்கள்.
நடுகல் (நாவல்) தீபச்செல்வன் டிஸ்கவரி புக் பேலஸ் ஈழத்துப் போர்க்காலப்படைப்புகள் கருணையுடன் கைதூக்கி விடப்படுவதும், அவற்றின் கனதிக்கு மீறிய கவனம் கொடுப்பதும் இலக்கிய மீட்பர்களின் சோலியில்லாத அணுகுமுறையாகிவிட்ட பின்னர் சென்னைப் புத்தகச் சந்தையை போர்க்கால இரவுகளின் அச்சத்துடன் கடக்கும் நல்லூழே வாய்த்திருக்கிறது. நம்பகமான புனைவுக்கான புறச்சூழலோ, நுண்தகவற் செறிவோ, படைப்பு மொழி குறித்த ஓர்மையோ, சொல் முறையில் கவனமோ இல்லாத ஆழமில்லாப் படைப்புகள் எப்போதும் வெளிவருபவை. இது அவை குறித்தான புகார்கள் இல்லை. ஆழமும், உள்விரிவுமற்ற குறைப்