விமர்சனங்கள் உட்பட அனைத்து எழுத்துகளும் ஏதோ ஒரு வகை அரசியல் சார்ந்தது தான்
தொண்ணூறுகளில் பாரிஸில் ‘அம்மா’, ‘எக்ஸில்’ இதழ்களில் கலகக்குரலாக ஒலித்தவர் சேனன். அவ்விதழ்களில் விளிம்புநிலை உரையாடல்கள் தனித்துவமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளையும் எழுதியவர். ‘அம்மா’வில் கதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். இவரின் சிறுகதைகள் மையம் சிதைக்கப்பட்டவையாகவும், கட்ட மைக்கப்பட்ட திருவுருக்களைக் கவிழ்ப்பதாகவும் இருப்பவை. அதிக விவரணைகளற்ற நேரடியான மொழியில் கதைசொல்லும் அக்கதைகள் சொல் முறையினாற் தனித்துவமானவை. வழமையான தொடக்கம் – நடு – முடிவு என்ற தமிழ்க் கதைகளின் சட்டகங்களிற்குள் அடங்கிவிட …
