சிறுதுளை

01. திருவைத் தேடி வந்திருந்த சின்னவனும், மொறீஸும் களைத்திருந்தனர். அவர்களது மென்நீலக் கட்டம் போட்ட சட்டை வியர்வையூறி வரியாக வெண் உப்பும், சேற்று நிறத்தில் புழுதியும் படிந்திருந்தது. நீண்ட தூரம் நடந்தே வந்திருப்பது சோர்ந்து உற்சாகமிழந்திருக்கும் கண்களில் தெரிந்தது. ஆனால் வீட்டுப் படலைக்கு மேலாகத் திருவைப் பெயர் சொல்லி அழைத்த மொறீஸின் குரல் சோர்வேயில்லாத அதிகாரத்தின் வரண்ட தொனியில் இருந்தது.

ஆனைக்கோடாலி

01. எலுங்கப் பாறை முகட்டில் இருவர் தயங்கி நிற்பது தெரிந்தது. தயக்கம் எதிர்பார்த்தது தான். மழைநீர் அரித்து, வழுக்குப் பாசியோடியிருக்கும் அபாயமான செங்குத்துச் சரிவு குறுக்கிட்டதில் ஏற்பட்ட தயக்கம். இருவரும் பட்ட அசைவுகள் முகில் மடிப்புகளினுள் தெரிந்தாலும், அவர்களுடைய கண்களில் கனலக்கூடிய அச்சத்தை மலையின் கீழ் இருந்தே என்னால் உணர முடிகிறது; கற்பனையில். கால் இடறினால் கீழே ஆழத்தில் ஆற்றின் குறுக்காகக் கட்டப்பட்டிருக்கும் கல் அணையின் மடிப்பில் உடல் கிடைக்கும்; சிவந்த தசைக் கூழாக. எங்கள் முறிக்கு,

ஆதிக்க சாதிக் கதையாடல்களும், தலித் எதிர் வரலாறுகளும்.

யாழ் சாதிவெறியும், ஆதிக்கசாதி மனநிலையும், புலிகளின் ஆதிக்க சாதிச் சாய்வும் வலிந்து நிறுவ வேண்டிய அபூர்வ நிகழ்வுகள் அல்ல. அவையே யாழ் வாழ்வின் அன்றாடத்துடன் இயல்பாக்கமும், அமைப்பாக்கமும் பெற்றுள்ள மிகப்பெரிய அதிகாரத் தரப்புக்கள். அந்த ஆதிக்கசாதி அதிகாரத் தரப்பு தன்னுடைய வளங்கள், ஊடகங்கள், கலாச்சார மேலாதிக்கம், பொருளாதார மேலாதிக்கங்களைக் கொண்டு உருவாக்கி நம்மிடம் கையளிக்கும் கதையாடல்கள் ஆதிக்க சாதியின் மேலாதிக்க வரலாறுகள் அன்றி வேறு அல்ல. ஆதிக்க சாதித்தரப்பு உருவாக்கி நம்மிடம் கையளித்திருக்கும் வரலாற்றுக்கு, எதிரான வரலாறுகளை

நூலக மீள் திறப்புத் தடையும் சாதிய அறிதற் கருவிகளும்.

யாழ் நூலக மீள் திறப்புத் தடை விவகாரத்தில் சாதியத்தின் பங்கை மறுக்கும்; சயந்தன், சோமீதரன் மற்றும் விதை குழுமத்தின் புரிதல்களில் எங்கு சிக்கலும் போதாமையும் இருக்கின்றனவென்றால், அவர்கள் அதை நிறுவ முயலும் வழிமுறை மற்றும் ஆதாரங்களில் தான். அவை போதாமை நிறைந்தவை மட்டும் அல்ல மிக அபத்தமானவையும் கூட. எவ்வளவு அபத்தமானவை என்றால் அவர்களது வழிமுறை, ஆதாரத் தொகுப்பு முறையைக் கொண்டு உலகில் இருக்கும் அத்தனை ஒடுக்குமுறைகளையும் நியாயப்படுத்தி விட முடியும்.

சாதியமும் புலிகளும்

சோமிதரன், சயந்தன் கட்டுரை, காணொலியின் மீது நாம் முன்வைக்கும் கேள்விகள் மிக எளிமையானவை. அவற்றின் நோக்கம், அவசரத் தொனி மற்றும் விடுபடல்கள் குறித்தவை. 17 வருடங்களின் முன்னரான நிகழ்வு ஒன்றினை மறுத்து உரையாட விழையும் போது அதற்கேற்ற முதிர்ச்சியும், பிரச்சனை குறித்த பரந்த பார்வையும் வேண்டியிருக்கிறது. தலித் பிரச்சனை போன்ற சமூகப் பிரச்சனைகளை கையாளும் போது மிகுந்த கவனமும், பொறுப்புணர்வும் வேண்டியிருக்கிறது. இத்தகைய தன்மைகளை எவற்றையும் அந்தக் காணொலியோ,கட்டுரையோ கொண்டிருக்கவில்லை என்பதே அவற்றின் முதலாவது பலவீனம்.

Scroll to Top