சிறுகதை

சிறுதுளை

01. திருவைத் தேடி வந்திருந்த சின்னவனும், மொறீஸும் களைத்திருந்தனர். அவர்களது மென்நீலக் கட்டம் போட்ட சட்டை வியர்வையூறி வரியாக வெண் உப்பும், சேற்று நிறத்தில் புழுதியும் படிந்திருந்தது. நீண்ட தூரம் நடந்தே வந்திருப்பது சோர்ந்து உற்சாகமிழந்திருக்கும் கண்களில் தெரிந்தது. ஆனால் வீட்டுப் படலைக்கு மேலாகத் திருவைப் பெயர் சொல்லி அழைத்த மொறீஸின் குரல் சோர்வேயில்லாத அதிகாரத்தின் வரண்ட தொனியில் இருந்தது.

ஆனைக்கோடாலி

01. எலுங்கப் பாறை முகட்டில் இருவர் தயங்கி நிற்பது தெரிந்தது. தயக்கம் எதிர்பார்த்தது தான். மழைநீர் அரித்து, வழுக்குப் பாசியோடியிருக்கும் அபாயமான செங்குத்துச் சரிவு குறுக்கிட்டதில் ஏற்பட்ட தயக்கம். இருவரும் பட்ட அசைவுகள் முகில் மடிப்புகளினுள் தெரிந்தாலும், அவர்களுடைய கண்களில் கனலக்கூடிய அச்சத்தை மலையின் கீழ் இருந்தே என்னால் உணர முடிகிறது; கற்பனையில். கால் இடறினால் கீழே ஆழத்தில் ஆற்றின் குறுக்காகக் கட்டப்பட்டிருக்கும் கல் அணையின் மடிப்பில் உடல் கிடைக்கும்; சிவந்த தசைக் கூழாக. எங்கள் முறிக்கு,

தனிமையின் நூறு ஆண்டுகள்

அக்கா சந்திவேம்பில் சாரத்துணியால் கைகள் கட்டப்பட்டிருந்தபடி போராளிகளின் துப்பாக்கியை நெஞ்சிற்கு நேரே எதிர்கொண்டபோது நெடுநாளைக்கு முந்திய மூன்று கோடைகளை நினைத்துக்கொண்டாள். முதற் கோடை; அடித்தோய்ந்த மழையில் நனைந்து, திரி திரியாகப் புகைந்தபடியிருந்த அவ்ரோ விமானத்தின் துலக்கமான வடிவம் அலுமினியத்தின் பளபளப்பில் அக்காவிற்கு நினைவில் வந்தது. அவ்ரோ விமானம் வாழைமரங்களை முறித்து வீழ்த்தி வாழைத் தோட்டத்தின் நடுவில், உடைந்த வெள்ளை முட்டையோடு போல சிதறிக் கிடந்தது. அதனைச் சுற்றி முறிந்திருந்த வாழை மரங்களின் இலைகள் தீயில் கருகியிருந்தன. கறுப்புப்

மிக ரகசிய இயக்கம்

01 ஓம் குரு எனக்கும் உங்களுக்கு வந்த சந்தேகமே வந்தது. அவள் கஞ்சாப்புகையின் கதகதப்பில் கதையைச் சொல்லத் தொடங்கிய கையோடு நானும் அவளை இடைமறித்து இதே கேள்வியைத்தான் கேட்டேன். அவள் அலங்க மலங்க முழித்தாள். இன்னொரு கஞ்சாவைத்துச் சுருட்டிய சிகரெட்டினை  பெட்டியிலிருந்து உருவியெடுத்து அதன் வாசனையை ஆழமாக உள்ளிழுத்தாள். பின்னர் அதனை உள்ளங்கையில் வைத்து நீண்ட விரல்களினால் உருட்டினாள். ’இல்லவே இல்லை ஊரிலை எண்ட அப்பாவின் இயக்கம் மிக இரகசிய இயக்கம்’ என்றபடி எழுந்து சென்று என்

13 Rue Albert Camus

01. பெண் கரும்புலியின் கை மிகவும் குளிர்ந்திருந்தது. ’எப்படிக் கண்டுபிடித்தாய் இந்த பங்கறை?’ என்றபடி எதிரிலிருந்த ஊதா நிறச் சோபாவைக் காட்டினாள்.  மெல்லிய சாம்பல்நிற மேற்சட்டையில் அவளது முலைகள் மிகச்சிறியதாக மேடிட்டிருந்தன. குட்டையான உருண்ட தேகம். சுருள்முடி கட்டையாக் கத்தரிக்கப்பட்டிருந்தது.  மிக சுத்தமாக துடைத்து பளபளப்பாகப் படிந்திருந்த மாபிள் தரையில் அவளின் பாதங்கள் வாத்துப்போல் வழுக்கிச் சென்றன. எதிரிலிருந்த சோபாவின் குஷனில் முழுவதுமாகப் புதைந்தது அமர்ந்தாள்.

Scroll to Top