உள்ளடக்கத்திற்குச் செல்ல
24.10.2026

வெள்ளிவீதி இலக்கியக் கூடுகை 1

உரையாடல் பகுதி 1

நாவல்களில் மொழி, காட்சிச் சித்தரிப்பு குறித்து தொடர்ந்து கேள்விகள் வந்தபடியே இருக்கின்றன. தமிழில் நல்ல நாவல்கள் என ஒரு பட்டியல் போட்டால், அதில் பெரும் விழுக்காடு நாவல்கள் செறிவான மொழியில், துல்லியமான காட்சிவிவரணைகள், சித்தரிப்புகளைக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆனால் அவற்றில் பொதுச் சித்திரங்கள் வராது. அப்படிப் பொதுச் சித்திரங்கள் வந்தால் அது நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுப்பதில்லை. அவற்றில் எழுத்தாளருக்கே தனியாகத் துலங்கும் புறச்சூழல் இருக்கும். அவரது தனித்த சொற்கள், படிமங்கள், உவமைகள். உண்மையில், அப்படியான சித்தரிப்புகளை நேரடி அனுபவத்தில் கூட ஈட்டிக்கொள்ளவே முடியாது. ஆனால் புனைவில் அவை திரண்டெழுந்து, ஒரு கதாபாத்திரமாக நின்றிருக்கும். இந்தச் செவ்வியல் மொழிபெயர்ப்பு நாவல்களில் அப்படியான இயல்புகள் அதிகம். பெருநாவல்களில் அவை அதிகமும் நிகழ்த்திப் பார்க்கப்படுகின்றன. சம்பவங்கள், கதைகளுக்கு இணையாகவே புறச்சூழலும் அங்கே இருக்கின்றன. இன்றைய தலைமுறைப் படைப்பாளிகளிடம் இந்தத் தனித்த அகம் வெளிப்படும் புள்ளிகளே மிகக் குறைவு. அவர்கள் பெரும்பாலும் பொதுச் சித்திரத்தையே கொடுக்கிறார்கள். அது நீளும்போது, புனைவை நீர்க்கச் செய்வதோடு பெரும் சுமையும் கூட. இதையொட்டி, இந்த உரையாடலில் என் கருத்துகளை ஓரளவு பதிவு செய்திருப்பதாகவே நம்புகிறேன்.

வெள்ளிவீதி இலக்கிய கூடுகையின் உரைகளின் முதற் பகுதி.

சிறகை  மற்றும் பர்தா