நோவிலும் வாழ்வு (கவிதைத் தொகுப்பு)

    நோவிலும் வாழ்வு வசிகரன் கவிதைகள் ஆக்காட்டி வெளியீடு 2024   கற்பாறைகளை மோதி மோதி ஒவ்வொரு அலையும் நுரைந்தழிவது போல் மொழியைக் கவிதைகள் இளக்குகின்றன. வசிகரன் கவிதைகளுக்குள் மோதும் அலைகளின் இடைவிடாத தீவிரம் கற்பாறையில் உப்பெனப் படிகிறது. அவரின் கவியுலகில் உருக்கொள்ளும் உடல்களும் நிலவுருக்களும் ஏற்கனவே ஈழத்தில் புழக்கத்தில் இருக்கும் கவியுலகுகளில் இருந்து பிறிதான ஒரு கரையை நோக்கியிருக்கிறது. அன்றாட வாழ்வின் இருளுலகுகளுக்குள் குத்தி ஏறி இறங்கும் …

செவ்வாத்தை

01. சாயம் உதிர்ந்து வெளிறிய துணியில் பொதிந்து வைத்திருந்த கல், சிவந்த தணல் துண்டு போல கனன்று எரிந்தது. நொடியில், துணியைப் பொசுக்கிவிடுவது போன்ற மூர்க்கமான தணல். துணியைப் பிரித்து கல்லை எங்கள் முன்னால் வைத்த வைரன், அமைதியாகவும் தீர்க்கமாகவும் அப்பாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். அப்பா, ஒரு நொடி தயக்கத்தின் பின் அதைக் கையிலெடுத்து உள்ளங்கையில் வைத்து மேல் கீழாகத் தூக்கிப் பார்த்தார். அது, அவருடைய கையில் ஒட்டாமல் …

இமிழ் : இரு நிகழ்வுகள்

இமிழ் – சிறுகதைத் தொகுப்பு விமர்சனமும் உரையாடலும் நிகழ்வு 1  யாழ்ப்பாணத்தில் ‘இமிழ்’ விமர்சனமும் – உரையாடலும் 04.05.2024 சனிக்கிழமை பி.ப 03.00 மணி பங்கேற்போர் பேராசிரியர் அ. ராமசாமி (தமிழ்நாடு) இ.இராஜேஸ்கண்ணன் சு. குணேஸ்வரன் தானா விஷ்ணு ந. மயூரரூபன் கிரிசாந்   கலைத்தூது அழகியல் கல்லூரி, 128, டேவிட் வீதி, யாழ்ப்பாணம் TP: 0770871681 / 0777577932 நிகழ்வு 2 சென்னை – இந்தியா 05.05.2024

ஒழுக்கவாதப் பெண்ணியத்தின் புழுதிப்புயல்

01. எழுத்தாளர் யதார்த்தன் மீது பாலியல்  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதனையொட்டி 51வது இலக்கியச் சந்திப்பின் தொகுப்பான இமிழில் யதார்த்தனின் சிறுகதை பிரசுரமானதைக் கேள்விக்குட்படுத்தியவர்களுக்கு, இலக்கியச் சந்திப்பு அரங்கிலும், முகநூலிலும் ஷோபாசக்தி சில பதில்களைக் கொடுத்திருக்கிறார். (பார்க்க: பின்னிணைப்பு 1)  இதில் கவனிக்க வேண்டியது, உரையாட வேண்டியது, விவாதிக்க வேண்டியது   ‘பாலியல் குற்றவாளி’ யதார்த்தன் – என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைத்தான். இதழ் தொகுப்பில் இருந்த நடைமுறைப் பிரச்சினைக்கான பதிலை ஷோபாசக்தி …

51 வது இலக்கியச் சந்திப்பு – நிகழ்வுநிரல்

51வது இலக்கியச் சந்திப்பு 30-31 மார்ச் 2024 – பாரிஸ் இடம்: 12 Rue de la République, 93350 Le Bourget நிகழ்வு நிரல் சனிக்கிழமை 30.03.2024 09.00 காலை உணவு 09.30 பங்கேற்பாளர்களின் தன்னறிமுகம் 9.45 51வது இலக்கியச் சந்திப்புத் தொடக்கவுரை விஜி 10.00 சிற்றிதழ்கள் அறிமுகம் காலம் :  வாசுதேவன் ஜீவநதி :  மாதவி மறுகா:  அகரன் வளர் :  அசுரா ஒருங்கிணைப்பு  – ச.தில்லைநடேசன் …