மிக ரகசிய இயக்கம்

01 ஓம் குரு எனக்கும் உங்களுக்கு வந்த சந்தேகமே வந்தது. அவள் கஞ்சாப்புகையின் கதகதப்பில் கதையைச் சொல்லத் தொடங்கிய கையோடு நானும் அவளை இடைமறித்து இதே கேள்வியைத்தான் கேட்டேன். அவள் அலங்க மலங்க முழித்தாள். இன்னொரு கஞ்சாவைத்துச் சுருட்டிய சிகரெட்டினை  பெட்டியிலிருந்து உருவியெடுத்து அதன் வாசனையை ஆழமாக உள்ளிழுத்தாள். பின்னர் அதனை உள்ளங்கையில் வைத்து நீண்ட விரல்களினால் உருட்டினாள். ’இல்லவே இல்லை ஊரிலை எண்ட அப்பாவின் இயக்கம் மிக இரகசிய …

கத்னா – மிஹாத்

கிளிட்டோரிஸ் சிதைப்பு விவகாரமானது இன்று தமிழகச் சூழலிலும் புதிய விவாதக் கதவுகளைத் திறந்திருக்கும் நிலையில் அதன் நிஜமான அக்கறைகளுக்குப் புறம்பாக இருக்கும் அதிகார நிகழ்ச்சி நிரலையும் கவனத்தில் கொள்ளாமல் விட்டு விட முடியாது.

நிறமழியும் வலிமையற்ற உடல்கள்

ராகவனின் மூன்று கதைகள் ராகவனின் மூன்று புதிய சிறுகதைகளின் களமும் போரின் பின்னரான யாழ்ப்பாணம். அவருடைய ஆரம்பகாலச் சோதனை முயற்சிக் கதைகளிலிருந்து புதிய கதைகளின் மொழியும், உள்ளடக்கமும் உருமாறி வந்திருக்கின்றன. ஆரம்பகால அறிக்கையிடும் கட்டிறுக்கமும், பிசிறில்லாத தன்மையுடனிருந்த மொழி வட்டார வழக்கைப் பிரதிசெய்யும் விதமாக உருமாற்றம் அடைந்திருக்கிறது.  அவர் முன்வைக்கும் கதை மாதிரிகள் தமிழிற்குப் புதியவையல்ல. ஆனால் யுத்தச் சிதிலங்களைச் சுமந்தலையும், தன் முதுகில் கலாசாரப் பழைமைகளைப் பெரும்பாரமாகக் கட்டிச் …

‘தமிழர்’ என்ற கட்டமைப்பு வன்முறை சார்ந்த மேற்சாதியக் கட்டமைப்பு – சுகன்

கவிஞர் சுகன் (கனசபை கருதரதேவனார்) முப்பது ஆண்டுகள் புலம்பெயர் சூழலில் ஒரு காத்திரமான கவிஞராக, இலக்கிய, சமூகச் செயற்பாட்டாளராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். தொன்மக் கதையாடல்களைக் கவிதைக்குள் புகுத்தித் தனக்கென ஒரு கவிதைப்பா ணியை உருவாக்கிக் கொண்டவர். இவரை, நீண்ட கலை – மரபு  வழியில் தோன்றிய ஒரு கலகக் குரல் எனலாம். நிலமிழந்தவனின் அவாந்திரக் குரலினை  வெளிப்படுத்தும் சுகன்,   காலத்தின் அடையாளமாக, ஒரு துர்ப்பாக்கிய சமூகத்தின் குரலாகத் தன்னை  “ஒரு  …

13 Rue Albert Camus

01. பெண் கரும்புலியின் கை மிகவும் குளிர்ந்திருந்தது. ’எப்படிக் கண்டுபிடித்தாய் இந்த பங்கறை?’ என்றபடி எதிரிலிருந்த ஊதா நிறச் சோபாவைக் காட்டினாள்.  மெல்லிய சாம்பல்நிற மேற்சட்டையில் அவளது முலைகள் மிகச்சிறியதாக மேடிட்டிருந்தன. குட்டையான உருண்ட தேகம். சுருள்முடி கட்டையாக் கத்தரிக்கப்பட்டிருந்தது.  மிக சுத்தமாக துடைத்து பளபளப்பாகப் படிந்திருந்த மாபிள் தரையில் அவளின் பாதங்கள் வாத்துப்போல் வழுக்கிச் சென்றன. எதிரிலிருந்த சோபாவின் குஷனில் முழுவதுமாகப் புதைந்தது அமர்ந்தாள். ‘உனது வீடு புதிர்ப்பாதையின் …

ஆக்காட்டி 14

ஆக்காட்டி 14வது இதழ் வெளிவந்திருக்கிறது. ஓரிரு வாரங்களில் இலங்கை, மற்றும் பிரான்ஸில் கிடைக்கும். இந்தியாவில் இதழ் வேண்டும் நண்பர்கள் ‘கருப்புபிரதி’ நீலகண்டனைத் தொடர்புகொள்ளலாம். இந்த இதழில் தோழர் சுகனின் விரிவான நேர்காணல் வந்திருக்கிறது. இலங்கைச் சூழலில் தொடர்ந்து தலித்திய உரையாடலைச் செய்துவருபவர் சுகன். இவர் புகலிடச்சூழலில் விரிவாக உரையாடப்பட்ட மூன்று தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கிறார். ‘தமிழர் என்ற கட்டமைப்பே வன்முறை சார்ந்த மேற்சாதியக் கட்டமைப்பு’ எனச் சொல்லும் சுகன் இஸ்லாமியரைப் போலவே …