• மூர்க்கரொடு முயல்வேனை 2
    என்னுடைய எதிர்வினைகளும் கருத்துகளும் ஏன் உரையாடல்களும் கூட மதுரன், சன்சிகன் போன்ற அறியாமையின் மூடர்களுடன் இல்லை. இந்த வசையர்களுடன் உரையாடுவதில் அர்த்தமோ, பிரயோசனமோ இல்லை. ஒரு விடயத்தைக் கிரகிக்க இயலாதவர்களுடன் என்ன உரையாடல் செய்ய முடியும்? கொஞ்சம் வாசிப்பும் எழுத்துப் பரீட்சியமும் இருந்தாலே இவர்களிடம் வெளிப்படும் அறியாமையின் மூர்க்கத்தை அறிந்து கொள்ள முடியும். இவர்களால் சிறு கட்டுரையையோ அதன் மையக் கருத்தையோ வாசித்துக் கிரகித்து தங்கள் எண்ணங்களைத் தொகுத்து முன்வைக்க முடியாது. என்னுடையது மிகச் சிறிய கட்டுரை. அதில் பிரச்சினையின் மையத்தைமட்டும் தொட்டு என்னுடைய மாற்றுப் பார்வையை முன்வைத்திருந்தேன். அவ்வளவுதான் இந்த விவாதங்களில் செய்ய முடியும். அதில் தனிநபர்… Read more: மூர்க்கரொடு முயல்வேனை 2
  • மூர்க்கரொடு முயல்வேனை
    //  இன்றைய செய்திகளின் தொகுப்பு !  சோபாசக்திக்கு தன்னறம் விருது வழங்கியிருக்கிறது. ஒடுக்கப்படுபவர்களுக்காக ஒலிக்கும் குரல் சோபாவினதாம்.  நண்பர் கிரிசாந்தின் சமீபத்திய பேச்சுக்களில் இந்துத்துவ வாடை அடிப்பதாக அடிக்கடி நண்பர்கள் விசனப்பட்டுக்கொள்கிறார்கள்.  தன்னறம் சிவராஜ் ஒரு கடும் இந்துத்துவா என்பது இலக்கிய நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும். நண்பர் கிரிசாந்தின் புத்தக அச்சாக்க பணிகளை முழுமையாக செய்து கொடுத்தது தன்னறம். சிவராஜ் மற்றும் தன்னறம் ஜெயமோகனின் B team என்பது எழுத்தாள, இலக்கிய வட்டங்களில் பேசுபொருள். ஜெயமோகனை தீவிரமாக எதிர்த்து வந்த நண்பர் கிரிசாந் சமீபகாலமாக அந்த எதிர் நிலையை கடந்து ஜெயமோகனை தனது ஆதர்ச எழுத்தாளராக வரித்துக்கொண்டிருக்கிறார். சோபாசக்திக்கு… Read more: மூர்க்கரொடு முயல்வேனை
  • நோவிலும் வாழ்வு உரைகள்
    வசிகரனின் நோவிலும் வாழ்வு கவிதைத்தொகுப்பு 03.11.2024  யாழ்ப்பாணம் காலைத்தூது அழகியல் கல்லூரியில் வெளியீடு செய்யப்பட்டது. அதன் தலைமையுரையில் கருணாகரன் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். பலரும் உணர்ந்து கொண்ட விடயம்தான் என்றாலும் திரும்பத் திரும்பச் சுட்ட வேண்டியிருக்கிறது. ஈழத்தில் இலக்கியக் கருத்துகள், விமர்சனங்கள், பார்வைகளை விரிவாக யாரும் முன்வைப்பதில்லை. வாசிக்கும் பலரும் கள்ள மெளனம் சாதிக்கிறார்கள் என்றும், அது கடக்கப்படவேண்டியதொரு நிலை என்றும் சுட்டியிருந்தார். உரையில்  பேஸ்புக்கிலாவது சிறுகுறிப்புகளாக வாசிப்பை முன்வைக்க வேண்டுமெனக் கேட்டிருந்தார். இந்த மெளடீகம் சில சகாப்த ஈழ இலக்கியத்தின் புதைசேற்று நிலைமை. இதற்கு ஈழத்துக்கே உரிய தனித்துவமான குறுகிய தீவு மனநிலைகளும், மனத்தடைகளும், இலக்கிய அறியாமைகளும்… Read more: நோவிலும் வாழ்வு உரைகள்
  • நீராழம்
    இளம் போராளி முள்ளந்தண்டு வரை ஊடுருவிப் பார்ப்பதாகத் தோன்றியதுமே என்னுள் சிறு துணுக்குறல்  எழுந்து வியர்த்தது. பனிக்கட்டிக் குளிராக நிலைகுத்தி நரம்புகளில் ஊடுருவும் சில்லிட்ட பார்வை.  என்னுள்ளே மெல்லிய நடுக்கம் ஊறினாலும் அதை மறைக்கக் குரலை லேசாக உயர்த்தினேன். எனக்கே என் குரல் அருவருப்பூட்டுவதாக இருந்தது. யாரோ இன்னொருவனின் கரகரத்த குரல் போல என்னிலிருந்து பிரிந்து காலடியில் நிழலாக நின்றிருக்கும் பிறிதொருவன் குரல் போல ஒலித்தது. போராளியின் பார்வையில் எந்த அசைவும் இல்லை. என் தடித்த குரல் அவனிடம்  சென்று சேர்ந்ததற்கான எந்தச் சலனமுமில்லை. சிறு தடுமாற்றமோ அச்சமோ தெரியாத கண்கள், ஈரலிப்பான கரிய பளிங்குக் கல்லாகச் சலனமற்றிருந்தன.… Read more: நீராழம்
  • நீராழம் – நீலம்
    என்னுடைய புதிய சிறுகதை நீராழம் நீலம் இதழில் வெளியாகியிருக்கிறது. /என்னிடம் இருந்தது ஏ.கே47. கூடவே சில 7மி.மி. ரவைகளும். அவையும் மிகச் சொற்பமாகவே எப்போதும் இருப்பில் இருக்கும். எண்ணி எண்ணிச் சுட வேண்டும். சுடும் ஒவ்வொரு குண்டின் நினைவுகளையும் குறித்துவைக்கும் குறிப்புக் கொப்பி வைத்திருந்தேன். ஒரு சூடு சுட்டதும் அந்தக் குண்டின் திசையை தாக்கிய இலக்கைக்  கவனமாகக் குறித்துக் கொள்வேன். கணக்குக் காட்ட அல்ல சொந்த நினைவுகளைப் பேண. ஓய்வான நேரங்களில் – அது அநேகமாகக் காவல் பணியின்  அலுப்பூட்டும் பின்னிரவுகளாக இருக்கும்-  அந்தக் குருதிக்கறை படிந்த குறிப்புக்களில் தங்கிவிட்ட தருணங்களைத் திரும்பவும் நினைவுகூர்ந்து பார்ப்பேன். ஏதும் பெரிதாக… Read more: நீராழம் – நீலம்
  • இமிழ் : தொகுப்பும் தவிர்ப்பும்
    01. ‘இமிழ்’ சிறுகதைத் தொகுப்பு மீது பல சந்தேகங்களும் ஊகங்களும் ‘விமர்சனங்கள்’ போல முன்வைக்கப்படுகின்றன.  இமிழ் தொகுப்பைத் தற்குறித்தனம் என்று சிலர்  மிகையாக மதிப்பிடுகின்றனர். சிலர் தங்களது ஊகங்கள், கற்பனைகள், தாழ்வுணர்வின் வடிகாலாக உரையாடுகிறார்கள். சிலர் ஷோபாசக்தி, தர்மு பிரசாத்துடைய இலக்கிய அதிகாரச் செயற்பாடாக அதாவது ‘பெரியண்ணர்’ மனநிலையாகவும், கதைத் தெரிவில் கடைப்பிடிக்கப்பட்ட உள்ளக இறுக்கத்தை / வடிகட்டலை சனநாயக மறுப்பாகவும் காண்கிறார்கள். தங்களுக்கு ஒவ்வாதவர்களின் கதைகளையும் சேகரித்துத் தொகுத்ததால் நாம் இருவரும் சேரம் போய்விட்டதாகவும், அங்கீகாரத்திற்குத் துண்டு போட்டுக் கொள்வதாகவும் அக்கறையுடன் கடிந்து கொள்கிறார்கள்.  தங்களுடைய கதைகளை, நாம் திட்டமிட்டுப் புறக்கணிப்பதாகவும், அதை இலக்கிய மோசடியாகவும் ‘சதி’… Read more: இமிழ் : தொகுப்பும் தவிர்ப்பும்
Scroll to Top