தனிமையின் நூறு ஆண்டுகள்

அக்கா சந்திவேம்பில் சாரத்துணியால் கைகள் கட்டப்பட்டிருந்தபடி போராளிகளின் துப்பாக்கியை நெஞ்சிற்கு நேரே எதிர்கொண்டபோது நெடுநாளைக்கு முந்திய மூன்று கோடைகளை நினைத்துக்கொண்டாள். முதற் கோடை; அடித்தோய்ந்த மழையில் நனைந்து, திரி திரியாகப் புகைந்தபடியிருந்த அவ்ரோ விமானத்தின் துலக்கமான வடிவம் அலுமினியத்தின் பளபளப்பில் அக்காவிற்கு நினைவில் வந்தது. அவ்ரோ விமானம் வாழைமரங்களை முறித்து வீழ்த்தி வாழைத் தோட்டத்தின் நடுவில், உடைந்த வெள்ளை முட்டையோடு போல சிதறிக் கிடந்தது. அதனைச் சுற்றி முறிந்திருந்த வாழை …

மிக ரகசிய இயக்கம்

01 ஓம் குரு எனக்கும் உங்களுக்கு வந்த சந்தேகமே வந்தது. அவள் கஞ்சாப்புகையின் கதகதப்பில் கதையைச் சொல்லத் தொடங்கிய கையோடு நானும் அவளை இடைமறித்து இதே கேள்வியைத்தான் கேட்டேன். அவள் அலங்க மலங்க முழித்தாள். இன்னொரு கஞ்சாவைத்துச் சுருட்டிய சிகரெட்டினை  பெட்டியிலிருந்து உருவியெடுத்து அதன் வாசனையை ஆழமாக உள்ளிழுத்தாள். பின்னர் அதனை உள்ளங்கையில் வைத்து நீண்ட விரல்களினால் உருட்டினாள். ’இல்லவே இல்லை ஊரிலை எண்ட அப்பாவின் இயக்கம் மிக இரகசிய …

13 Rue Albert Camus

01. பெண் கரும்புலியின் கை மிகவும் குளிர்ந்திருந்தது. ’எப்படிக் கண்டுபிடித்தாய் இந்த பங்கறை?’ என்றபடி எதிரிலிருந்த ஊதா நிறச் சோபாவைக் காட்டினாள்.  மெல்லிய சாம்பல்நிற மேற்சட்டையில் அவளது முலைகள் மிகச்சிறியதாக மேடிட்டிருந்தன. குட்டையான உருண்ட தேகம். சுருள்முடி கட்டையாக் கத்தரிக்கப்பட்டிருந்தது.  மிக சுத்தமாக துடைத்து பளபளப்பாகப் படிந்திருந்த மாபிள் தரையில் அவளின் பாதங்கள் வாத்துப்போல் வழுக்கிச் சென்றன. எதிரிலிருந்த சோபாவின் குஷனில் முழுவதுமாகப் புதைந்தது அமர்ந்தாள். ‘உனது வீடு புதிர்ப்பாதையின் …

விண்மீன்களின் இரவு

 01. இவன் அந்தத் தடிமனான கண்ணாடிக் கட்டிடத்தை விட்டு எழுந்து ஓடிவிட நினைத்தான். ஹீற்ரர் வெப்பம் பிடரி, காதுமடலின் பின்புறம் எங்கும் கொதித்தது. பல சோடிக்கண்கள் தன் பிடரியில் மொய்த்திருப்பதை நினைத்துப் பார்த்தான். தனது உடல் கேள்விகளால் துகிலுரிந்து நிர்வாணமாவதைப் பதட்டத்துடன் எதிர்கொண்டான். ஒவ்வொரு கேள்வியும் துப்பாக்கி ரவைகளை விட அதிக ஆழத்தில் அவனைத் துளைத்தன. உச்சமாக அவனுடைய அக்காவைப்பற்றிக் கேட்டது நீலப்படத்தின் சில துண்டுக் காட்சிகளை நினைப்பூட்டியது. சிப்பாயின் …

பித்தளைத் தீர்வுகள்

01. சமாதானத்தின் தூதுவர்கள் 22.02.2002. அதுவொரு வெள்ளிக்கிழமையின் உலர்ந்த மதியம். ஊரார் சமாதானத்தின் மகிழ்ச்சி மிதக்கும் கண்களுடன் தார் வீதி எங்கும்  அலைந்து திரிந்தபடி இருந்தனர். வீதியின் குறுக்காக இருந்த பழைய கல் மதகுக் கட்டில் அமர்ந்திருந்த சுடலையின் கண்கள் சமாதானத்தின் மகிழ்ச்சியை அச்சத்துடன் வேடிக்கை பார்த்தபடி இருந்தன. சாரத்தை ஒதுக்கி ஒரு பக்கமாகக் குந்தி இருந்த அவரது கண்களில் எஞ்சிய போதை மெல்லிய சிவப்புத் தணலாக ஒளிர்ந்தபடி இருந்தது. …

நிலாவரை

தங்கராசு, உணவகம் வந்தபோது அது  பூட்டி இருந்தது. நேற்று மதியம் வரை சன சந்தடியில் அல்லாடிய உணவகம் இன்று எவ்விதச் சலனமும் இல்லாமல் இருந்தது. அதன் கண்ணாடிக் கதவில் புதிதாக வெள்ளைத் துண்டில் அறிவித்தல் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அதில் அடுத்த மாதம் கடை மீளத் திறக்கப்படும் என்ற அறிவித்தல் இருந்தது. உணவகத்தைப் பூட்டியதற்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக்கோரி இருந்தார்கள். தங்கராசுவிற்கு அது  பிடித்திருந்தது. அறிவித்தலை மெதுவாகத் தடவிப் பார்த்துத் தலையை …