நோவிலும் வாழ்வு உரைகள்

வசிகரனின் நோவிலும் வாழ்வு கவிதைத்தொகுப்பு 03.11.2024  யாழ்ப்பாணம் காலைத்தூது அழகியல் கல்லூரியில் வெளியீடு செய்யப்பட்டது. அதன் தலைமையுரையில் கருணாகரன் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். பலரும் உணர்ந்து கொண்ட விடயம்தான் என்றாலும் திரும்பத் திரும்பச் சுட்ட வேண்டியிருக்கிறது. ஈழத்தில் இலக்கியக் கருத்துகள், விமர்சனங்கள், பார்வைகளை விரிவாக யாரும் முன்வைப்பதில்லை. வாசிக்கும் பலரும் கள்ள மெளனம் சாதிக்கிறார்கள் என்றும், அது கடக்கப்படவேண்டியதொரு நிலை என்றும் சுட்டியிருந்தார். உரையில்  பேஸ்புக்கிலாவது சிறுகுறிப்புகளாக வாசிப்பை முன்வைக்க வேண்டுமெனக் கேட்டிருந்தார். இந்த மெளடீகம் சில […]