பிரபஞ்ச நூல்

‘பிரபஞ்ச நூல்’ ஷோபாசக்தியின் மிக நல்ல சிறுகதைகளுள் ஒன்று. இவை (மாதா, காயா, பிரபஞ்ச நூல்) இவரின் அடுத்த பட்டாம்பூச்சிக் காலத்தின் கதைகள். ஆரம்பத்தில் எழுதிய வட்டார வழக்கு கதைகளில் இருந்து நகர்ந்த நுட்பமும் பகடியும் கூடிய – அவரே சொல்லிக் கொள்வதுபோல் சற்றே நீளமாக்கப்பட்ட அரசியல் துண்டுப்பிரசுர – காலத்திலும் விபச்சாரியைப்* பற்றித் ‘தமிழ்’ என்று ஒரு கதை எழுதி இருக்கிறார். அது அரசியல் அழுத்தப் பின்னணியுடைய கதை. அக்கதை சொல்லிக்கு ஊரில் ஒரு மழை […]