சிகண்டி : சிகண்டி அம்பையாகுதல்.

01. பெருநகரின் இருளுலகைச் சித்தரிக்கும் படைப்புக்களில் வன்முறையும், குரூரமும் தூக்கலாக இருக்க வேண்டியதொரு நியதி உண்டு. அது இருளுலகைச் சித்தரிப்பதன் போதெழும் சிக்கல்களில் ஒன்று. அந்த இருளுலகு, வன்முறையின் மேல் மனிதக் கீழ்மையின் மேல் பரபரப்பானதாகவும் கூடவே சற்றே நாடகப் பாங்கானதாகவும் இருக்க வேண்டியதாகிறது. அப்படி இல்லாவிடில் இருள் வாழ்வின் குரூரம் படைப்பில் பிரதிபலிக்காதது போன்ற பிரமை எழும். கூடவே இருள் வாழ்க்கைக் களம்  வன்முறையையும் சாகசத்தையும் அவற்றின் விளிம்புகள் வரை நகர்த்தக் கூடியதாக இருக்கின்றது. அவை […]