வால்
01. ‘டொப்’ என்ற சத்தம் கேட்டுக் கண் விழித்தபோது எங்கிருக்கிறேன் எனத் தெரியாத நல்ல உறக்கத்திலிருந்தேன். விழித்ததும் கூதல் காற்றே முகத்தில் அறைந்தது. கூடவே பிணம் எரியும் கருகல் வாசனையும் நாசியில் கரித்தது. மூளை மடிப்புகள் விரிய உடல் அதிர்ந்து குளிர்ந்தது. காலை வெய்யிலில் கண்கள் கூசிச் சுருங்கின. எழுந்து அமர விருப்பமில்லாமல் இரு கைகளையும் கோர்த்துக் கால்களினுள் செருகி தோளைக் குறுக்கி சூட்டைத் தேக்கி உடலைக் கதகதப்பாக்கிப் படுத்திருந்தேன். குடலை அறுக்கும் வல்லூறுகளின் அடித் தொண்டை […]