பூர்வ நிலம் நீங்கிய அயல் நிலக் கதைகள்.
சாதனாவின் கதைகளை, தொகுப்பாக வெளிவர முன்னரும் வாசித்திருக்கிறேன். தொகுப்பின் அதிகமான கதைகள் (4) ஆக்காட்டியில் வெளியாகி இருக்கின்றன. வெளியாகிய காலங்களில் இருட்குகைக்குள் பாதுகாக்கப்படும் இரகசியக் கதைகள் போன்ற சொற்பக் கவனிப்பே கிடைத்திருக்கிறது. அதிகம் கவனிக்கப்படாததால் நல்ல கதைகள் எனச் சொல்லும் பக்குவம் இன்னும் கைவரவில்லை. சாதனாவின் கதைகளின் போதாமைகளையும், அவை நிலம் நீங்கிச் செல்வதின் அர்த்தமின்மைகளையும் கோடிட விழைகிறேன்.