நஞ்சுண்டகாடு : முரண் உரையாடல்களுக்கான வெளி

நஞ்சுண்டகாடும்  புலம்பெயர்  இலக்கிய  வெளியும் வணக்கம்  நண்பர்களே ! இதுவொரு  வித்தியாசமான  புலம்பெயர்  இலக்கியக்கூட்டம் முரண்களின் தொகையாகப்  பல்வேறு  அரசியல் தெரிவுடையவர்களும் வந்திருக்கிறார்கள். இதுவொரு  இனிய தருணம்.  இதில்  நான் நஞ்சுண்டகாடு  குறித்துப்  பேச அழைக்கப்பட்டிருக்கிறேன்.  நஞ்சுண்டகாடு நாவல்  குறித்துப் பேசமுன்னர் விடுதலைப்போராட்டக்காலங்களிலும்,  அது முள்ளிவாய்க்காலில்  மூளியாகச்சிதைக்கப்பட்ட  பின்னரும்  வந்த நாவல்கள் குறித்துத்    தொகுத்துப் பார்த்துவிடலாம். முள்ளிவாய்க்காலின்  பின்னராக விடுதலைப் போராட்டத்தின் தோல்வி  குறித்தும்,  அதன்  போராட்ட  அவலம், அராஜகப்போக்கு, வன்முறையரசியல்  குறித்தும் சில  நாவல்கள் […]