தீபன் – No fire zone

காட்சி  / ஒன்று ஏழுவருடங்களின் முன்னொரு குளிர் காலத்தில் பிரான்ஸ் வந்த போது மூன்றாம் உலக நாடொன்றின் கிராமப்புறத்தானிற்கு இருக்கும் அத்தனை எதிர்பார்ப்புகளும் என்னுள் இருந்தன. முதலில் நல்லதொரு வேலை தேடிவிட்டு பின்னர் சாவகாசமாக இருக்கலாம் என்ற நினைப்பே மிகுந்திருந்தது. நல்ல வேலை என்பது குதிரைக் கொம்பாக இருந்த காலம். கிடைத்த வேலையில் கொழுவிக்கொள் பின்னர் நல்ல வேலை தேடிக்கொள்ளலாம் என்பதே மூத்தவர்களின் ஆலோசனை. அதற்கு முன்னர் விசாவை எடுக்கும் …

நஞ்சுண்டகாடு : முரண் உரையாடல்களுக்கான வெளி

நஞ்சுண்டகாடும்  புலம்பெயர்  இலக்கிய  வெளியும் வணக்கம்  நண்பர்களே ! இதுவொரு  வித்தியாசமான  புலம்பெயர்  இலக்கியக்கூட்டம் முரண்களின் தொகையாகப்  பல்வேறு  அரசியல் தெரிவுடையவர்களும் வந்திருக்கிறார்கள். இதுவொரு  இனிய தருணம்.  இதில்  நான் நஞ்சுண்டகாடு  குறித்துப்  பேச அழைக்கப்பட்டிருக்கிறேன்.  நஞ்சுண்டகாடு நாவல்  குறித்துப் பேசமுன்னர் விடுதலைப்போராட்டக்காலங்களிலும்,  அது முள்ளிவாய்க்காலில்  மூளியாகச்சிதைக்கப்பட்ட  பின்னரும்  வந்த நாவல்கள் குறித்துத்    தொகுத்துப் பார்த்துவிடலாம். முள்ளிவாய்க்காலின்  பின்னராக விடுதலைப் போராட்டத்தின் தோல்வி  குறித்தும்,  அதன்  போராட்ட  அவலம், …

ஃபன்றி(Fandry) – சாதியில் உலர்ந்த நிலம்

(மராத்தியப்படம் ஃபன்றியை முன்வைத்து) சாதியத்தின் வேர்கள் மிக நுண்ணியமானவை. வாழ்வின் சிறு அசைவில் அது தன் வெறுப்பை, வன்மத்தை, பெருமிதத்தை, புறக்கணிப்பை தொடர்ந்து அழுந்தப் பதியவைத்தபடி இருக்கிறது. மனிதன் நவீனமாகிய பின்னர் சாதியமும் தனது புராதன புழுதிபடிந்த காட்டுமிராண்டி மரவுரியை  உதிர்த்துவிட்டு நவீன உடைக்குள் தன் கூரிய கறைபடிந்த பற்களை மறைத்திருக்கிறது. சொந்த இடம் எது? என்று விசாரிப்பதில் தொடங்கி இன்னாருக்கு சொந்தமா? என விசாரிப்பது வரை சாதியத்தின் எச்சங்கள் …

பதற்றங்களின் நாயகன்

மஹெல ஜெயவர்தனாவின் மட்டையாட்டத்தில் 2003ம் ஆண்டு  உலகக் கிண்ணத் தொடர் முக்கியமானது. அத்தொடரில்அவர் வீழ்ச்சியின் உச்சத்திலிருந்தார். தொடர்ந்துமோசமாக அடித்தாடி ஆட்டமிழந்தார். அவரிடமிருந்த நிதானம் காற்றில் வைத்த கற்பூரம் போல சுவடேயில்லாமல் போயிருந்தது. வெறுமையானவெங்காயப் பெட்டிபோல கடந்தகால வாசம் மட்டுமே வீசினார். பலரும்அவரில் விசனப்படத் தொடங்கிய நேரம். அந்தவிசனங்களின் உச்சமாயிருந்தது, அவுஸ்ரேலியாவுடனானஉலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி. 172 எனும்  இலக்கை, 38.1 பந்துப்பரிமாற்றங்களில் (ஷீஸ்மீக்ஷீs) துரத்திய இலங்கை, வெறும்123ஐ மாத்திரமே அடித்துத் …