இலங்கையில் தலித்தியம் பேசுதல்
என்னுடைய அபிப்பிராயத்தில் நீங்கள் உங்கள் சமூக ஒழுங்கை மாற்றாவிட்டால் மிகக் குறைந்த அளவிலான முன்னேற்றத்தையே நீங்கள் அடைய முடியும் என்பதில் எந்த அய்யமும் இல்லை. தற்பாதுகாப்பிற்கோ இல்லை தாக்குதலுக்கோ உங்கள் சமூகத்தை நீங்கள் ஒன்றுதிரட்டவே முடியாது. சாதியின் அஸ்திவாரத்தின் மேல் நீங்கள் எதையுமே கட்டியெழுப்ப முடியாது. நீங்கள் ஒரு தேசத்தைக் கட்ட முடியாது. ஒரு அறிவியலைக் கட்ட முடியாது. சாதியின் அஸ்திவாரத்தின் மேல் நீங்கள் கட்டும் எதுவும் விரிசல் விடும்; மேலும் அது எப்போதும் முழுமையடையாது. […]