நாவல்

இச்சாவும் சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களும்…

01. இச்சா அரசியல் சராசரித்தனங்கள் நிறைந்திருக்கும் இலங்கைத் தமிழ்ச் சூழலில், ஷோபாசக்தியின் படைப்புகள்  இன்னும் சரியாக வாசிக்கப்படவில்லை. அவரது படைப்புகளில் அரசியல் கருத்துகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் வாசிப்புகளே நிகழ்ந்திருக்கின்றன. அதனால் அவரது படைப்புகளுக்கான ஆழமான வாசிப்புக் கட்டுரைகள் , விமர்சனங்கள், திறனாய்வுகள் சொற்பமாகவே வாசிக்கக் கிடைக்கின்றன. இருபது வருடங்களாக எழுதிவருபவரும், தன் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளில் ஆழமான செல்வாக்கையும் செலுத்தும் அவருடைய படைப்புலகை அணுக நல்ல வாசிப்புக் கட்டுரைகள் இல்லை என்பது தமிழின் இயல்பான வழமைதான் என்பதால் […]

சல்வீனியா

பஷீரின், மஜீத்திடம் ஒன்றும் ஒன்றும் எத்தனையென ஆசிரியர் கேட்கிறார். அவன் கொஞ்சம் பெரிய ஒன்று என்கிறான். பிரிந்து கிடக்கும் இரண்டு ஆறுகள் சேர்ந்து பெரிதாகுவதை ஊர்க் கோடியில் பார்த்திருக்கிறான் மஜீத். பஷீரின் கதைகளில்,  பிரிந்தும் பிளந்தும் கிடப்பவை பிணைந்துகொள்ளும் இரசவாதம் நிகழ்கின்றது. பஷீரின் சிறுவர்கள் தனியான உடைந்த மீமொழியும், பார்வையுமுள்ளவர்கள். அவர்களுடைய உலகில் கோணல்களும் அழகாகிவிடுகின்றன. ஆனால் அம்பரய ’சுமனே’ சிறுவனாகவும், வளர்ந்தவனாகவும் இருக்கிறான். ஊராருக்குக் கோணலாகவும் ஊராருடன் எதிர்வினைபுரிபவனாகவும் இருக்கிறான். அவனது சிந்தனை, செயலில் முதிர்ச்சியும்

என்னவாக இருந்தார் லெனின் சின்னத்தம்பி

புலம்பெயர்ந்த  இலங்கைத் தமிழர்களால்  எழுதப்பட்ட நாவற்பிரதிகளில் பல பொதுப்போக்குகளை நாம் அடையாளம் காணமுடியும். அதன் உரையாடற் புள்ளியாக எப்போதும் இலங்கையும், அங்கு நடைபெற்ற போருமே இருந்திருக்கிறது. இலங்கையின் அரசியற் பிரக்ஞையிலிருந்து விலகி மக்கள் பிரச்சினைப்பாடுகளைப் பேசிய நாவல்களென எதையும் தனித்து அடையாளம் காட்டமுடிவதில்லை. பெரும்பாலான புலம்பெயர் படைப்பாளிகள் இயக்கப் பின்புலம் உள்ளவர்கள். அதுவே அவர்களின் படைப்புகளின் அடியில் கரும்பரப்பாக உருத்திரண்டிருக்கிறது. அவர்கள் முன்னிருந்த தேவையாக தமது அரசியற் பிரக்ஞைக்கு அதரவு கோரும் முனைப்போடு உருவாக்கிய பிரதிகளில் அவர்களின்

Scroll to Top