நிகழ்வுகள்

வாழ்க்கைக்குத் திரும்புதல் – அறிமுக நிகழ்வு

  காலம் என்பது இருளிலிருந்து ஒளிக்கும் ஒளியிலிருந்து இருளுக்குமாய் தாவுகின்ற ஒரு குரங்கு. இந்தக் குரங்கினை கிளைகளிலிருந்து அகற்றிவிட்டால் எஞ்சி நிற்பது மொட்டை வெளிச்சம் இல்லாவிடின் பட்டை இருள். சமயங்களில் நம்மை வலிந்து இருளுக்குள் திணித்து கொள்கையில் அங்கே பரா வெளிச்சங்களாக உங்களைத் துலக்குபவை கவிதைகள் எனலாம். இந்தப் பரா வெளிச்சத்தை யாரோ ஒருவர் ஏவியிருக்கலாம். ஆனால் துலங்கும் அதன் ஒளியில் வாசிக்கப்படுவதாக உங்களின் அகம் அமைந்து விடுகிறது. என்ன இது கவிதை என்பது வாசகன் வாசிப்பதுதானே, […]

நோவிலும் வாழ்வு வெளியீடும் உரைகளும்.

வசிகரனின் நோவிலும் வாழ்வு கவிதைத்தொகுப்பு 03.11.2024  யாழ்ப்பாணம் காலைத்தூது அழகியல் கல்லூரியில் வெளியீடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வின் பதிவு. நோவிலும் வாழ்வு கவிதை நூலை இலங்கையில் பெற்றுக் கொள்ள : https://venpaa.lk/book/novilum-vazvu

வசிகரனின் நோவிலும் வாழ்வு அறிமுகமும் வெளியீடும்.

ஆக்காட்டி வெளியீடான வசிகரனின் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டும் அறிமுகமும் நிகழ்வு 03.11.2024 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கலைத்தூது அழகியல் கல்லூரியில் நிகழ்ந்தது. அதன் ஒளிப்படங்கள்.  

இமிழ் : இரு நிகழ்வுகள்

இமிழ் – சிறுகதைத் தொகுப்பு விமர்சனமும் உரையாடலும் நிகழ்வு 1  யாழ்ப்பாணத்தில் ‘இமிழ்’ விமர்சனமும் – உரையாடலும் 04.05.2024 சனிக்கிழமை பி.ப 03.00 மணி பங்கேற்போர் பேராசிரியர் அ. ராமசாமி (தமிழ்நாடு) இ.இராஜேஸ்கண்ணன் சு. குணேஸ்வரன் தானா விஷ்ணு ந. மயூரரூபன் கிரிசாந்   கலைத்தூது அழகியல் கல்லூரி, 128, டேவிட் வீதி, யாழ்ப்பாணம் TP: 0770871681 / 0777577932 நிகழ்வு 2 சென்னை – இந்தியா 05.05.2024

Scroll to Top