கரும்புலிகள்

திலீபன் : கரும்புலியும், அகிம்சைவாதியும்.

திலீபனின் நினைவு நாட்களில் காந்தியின் ‘ஒறிஜினல்’ அகிம்சை சந்தேகிக்கப்படும் சடங்கு நடக்கும். அதொரு வருட வழமை என்பதால் அதில் விசனப்பட ஏதும் இருப்பதில்லை. அப்படி ஏதும் நிகழாவிட்டால் மனம் பதட்டமடைமகிறது.சமூகம் முதிர்ந்துவிட்டதா? இல்லை கனிந்து விட்டதா? என்ற சாத்தியமற்ற சந்தேகங்கள் வலுக்கின்றன. அந்த உரையாடல்களின் ‘வெளியே’ இருந்தாலும் அவற்றைத் தொகுத்துக் கொள்ள முடியும். அவற்றின்  உள்ளடக்கம் அவை செல்லும் திசைக்குமான அச்சுகள் புலி விசுவாசிகளாலும், புலி எதிர்ப்பாளர்களாலும் பல நூற்றாண்டுகளின் முன்னரே வார்த்தெடுக்கப்பட்ட மாறாத திண்ணமுடையவை. வார்ப்புகளைச் […]

சிறுதுளை

01. திருவைத் தேடி வந்திருந்த சின்னவனும், மொறீஸும் களைத்திருந்தனர். அவர்களது மென்நீலக் கட்டம் போட்ட சட்டை வியர்வையூறி வரியாக வெண் உப்பும், சேற்று நிறத்தில் புழுதியும் படிந்திருந்தது. நீண்ட தூரம் நடந்தே வந்திருப்பது சோர்ந்து உற்சாகமிழந்திருக்கும் கண்களில் தெரிந்தது. ஆனால் வீட்டுப் படலைக்கு மேலாகத் திருவைப் பெயர் சொல்லி அழைத்த மொறீஸின் குரல் சோர்வேயில்லாத அதிகாரத்தின் வரண்ட தொனியில் இருந்தது.

Scroll to Top