சிறுகதை

பிரபஞ்ச நூல்

‘பிரபஞ்ச நூல்’ ஷோபாசக்தியின் மிக நல்ல சிறுகதைகளுள் ஒன்று. இவை (மாதா, காயா, பிரபஞ்ச நூல்) இவரின் அடுத்த பட்டாம்பூச்சிக் காலத்தின் கதைகள். ஆரம்பத்தில் எழுதிய வட்டார வழக்கு கதைகளில் இருந்து நகர்ந்த நுட்பமும் பகடியும் கூடிய – அவரே சொல்லிக் கொள்வதுபோல் சற்றே நீளமாக்கப்பட்ட அரசியல் துண்டுப்பிரசுர – காலத்திலும் விபச்சாரியைப்* பற்றித் ‘தமிழ்’ என்று ஒரு கதை எழுதி இருக்கிறார். அது அரசியல் அழுத்தப் பின்னணியுடைய கதை. அக்கதை சொல்லிக்கு ஊரில் ஒரு மழை […]

தனிமையின் நூறு ஆண்டுகள்

அக்கா சந்திவேம்பில் சாரத்துணியால் கைகள் கட்டப்பட்டிருந்தபடி போராளிகளின் துப்பாக்கியை நெஞ்சிற்கு நேரே எதிர்கொண்டபோது நெடுநாளைக்கு முந்திய மூன்று கோடைகளை நினைத்துக்கொண்டாள். முதற் கோடை; அடித்தோய்ந்த மழையில் நனைந்து, திரி திரியாகப் புகைந்தபடியிருந்த அவ்ரோ விமானத்தின் துலக்கமான வடிவம் அலுமினியத்தின் பளபளப்பில் அக்காவிற்கு நினைவில் வந்தது. அவ்ரோ விமானம் வாழைமரங்களை முறித்து வீழ்த்தி வாழைத் தோட்டத்தின் நடுவில், உடைந்த வெள்ளை முட்டையோடு போல சிதறிக் கிடந்தது. அதனைச் சுற்றி முறிந்திருந்த வாழை மரங்களின் இலைகள் தீயில் கருகியிருந்தன. கறுப்புப்

மிக ரகசிய இயக்கம்

01 ஓம் குரு எனக்கும் உங்களுக்கு வந்த சந்தேகமே வந்தது. அவள் கஞ்சாப்புகையின் கதகதப்பில் கதையைச் சொல்லத் தொடங்கிய கையோடு நானும் அவளை இடைமறித்து இதே கேள்வியைத்தான் கேட்டேன். அவள் அலங்க மலங்க முழித்தாள். இன்னொரு கஞ்சாவைத்துச் சுருட்டிய சிகரெட்டினை  பெட்டியிலிருந்து உருவியெடுத்து அதன் வாசனையை ஆழமாக உள்ளிழுத்தாள். பின்னர் அதனை உள்ளங்கையில் வைத்து நீண்ட விரல்களினால் உருட்டினாள். ’இல்லவே இல்லை ஊரிலை எண்ட அப்பாவின் இயக்கம் மிக இரகசிய இயக்கம்’ என்றபடி எழுந்து சென்று என்

Scroll to Top