தலித்தியம்

ஆதிக்க சாதிக் கதையாடல்களும், தலித் எதிர் வரலாறுகளும்.

யாழ் சாதிவெறியும், ஆதிக்கசாதி மனநிலையும், புலிகளின் ஆதிக்க சாதிச் சாய்வும் வலிந்து நிறுவ வேண்டிய அபூர்வ நிகழ்வுகள் அல்ல. அவையே யாழ் வாழ்வின் அன்றாடத்துடன் இயல்பாக்கமும், அமைப்பாக்கமும் பெற்றுள்ள மிகப்பெரிய அதிகாரத் தரப்புக்கள். அந்த ஆதிக்கசாதி அதிகாரத் தரப்பு தன்னுடைய வளங்கள், ஊடகங்கள், கலாச்சார மேலாதிக்கம், பொருளாதார மேலாதிக்கங்களைக் கொண்டு உருவாக்கி நம்மிடம் கையளிக்கும் கதையாடல்கள் ஆதிக்க சாதியின் மேலாதிக்க வரலாறுகள் அன்றி வேறு அல்ல. ஆதிக்க சாதித்தரப்பு உருவாக்கி நம்மிடம் கையளித்திருக்கும் வரலாற்றுக்கு, எதிரான வரலாறுகளை […]

நூலக மீள் திறப்புத் தடையும் சாதிய அறிதற் கருவிகளும்.

யாழ் நூலக மீள் திறப்புத் தடை விவகாரத்தில் சாதியத்தின் பங்கை மறுக்கும்; சயந்தன், சோமீதரன் மற்றும் விதை குழுமத்தின் புரிதல்களில் எங்கு சிக்கலும் போதாமையும் இருக்கின்றனவென்றால், அவர்கள் அதை நிறுவ முயலும் வழிமுறை மற்றும் ஆதாரங்களில் தான். அவை போதாமை நிறைந்தவை மட்டும் அல்ல மிக அபத்தமானவையும் கூட. எவ்வளவு அபத்தமானவை என்றால் அவர்களது வழிமுறை, ஆதாரத் தொகுப்பு முறையைக் கொண்டு உலகில் இருக்கும் அத்தனை ஒடுக்குமுறைகளையும் நியாயப்படுத்தி விட முடியும்.

Scroll to Top