டொமினிக் ஜீவா : தலித் எனும் தன்னுணர்வு

கடந்த எழுபது வருடங்களாக டொமினிக் ஜீவா இடையீடு செய்து கொண்டிருந்த இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு அவரது பங்களிப்பென்ன?  தன்னலம் கருதாத தனிமனித இயக்கத்திற்கு சமூகத்தில் ஒரு மதிப்பும் கரிசனமும் எப்போதும் உண்டு. பண்பாட்டுத் தளத்திலான இயக்கத்திற்கு மட்டுமே அந்தக் கரிசனத்திலிருந்து விதிவிலக்கு உண்டு. அவை பயனற்ற வெற்று வேலையாகவே பொதுச்சமூகத்தால் புரிந்துகொள்ளப்படும். அதிலும் பொருளியல் ஆதாயங்கள் ஏதும் கிடைக்காத கைக்காசைக் கரியாக்குகிற இயக்கியச் செயற்பாட்டை, சமூகம் எள்ளலுடன் எதிர்கொள்ளும். அந்த எள்ளலுடன் கூடிய நிராகரிப்பைச் சந்திக்காத தமிழ்ப் […]