நேர்காணல்

‘தமிழர்’ என்ற கட்டமைப்பு வன்முறை சார்ந்த மேற்சாதியக் கட்டமைப்பு – சுகன்

கவிஞர் சுகன் (கனசபை கருதரதேவனார்) முப்பது ஆண்டுகள் புலம்பெயர் சூழலில் ஒரு காத்திரமான கவிஞராக, இலக்கிய, சமூகச் செயற்பாட்டாளராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். தொன்மக் கதையாடல்களைக் கவிதைக்குள் புகுத்தித் தனக்கென ஒரு கவிதைப்பா ணியை உருவாக்கிக் கொண்டவர். இவரை, நீண்ட கலை – மரபு  வழியில் தோன்றிய ஒரு கலகக் குரல் எனலாம். நிலமிழந்தவனின் அவாந்திரக் குரலினை  வெளிப்படுத்தும் சுகன்,   காலத்தின் அடையாளமாக, ஒரு துர்ப்பாக்கிய சமூகத்தின் குரலாகத் தன்னை  “ஒரு  முன்னாள் போராளி என்றே நான் அறிமுகப்படும்போது […]

விமர்சனங்கள் உட்பட அனைத்து எழுத்துகளும் ஏதோ ஒரு வகை அரசியல் சார்ந்தது தான்

தொண்ணூறுகளில் பாரிஸில்   ‘அம்மா’, ‘எக்ஸில்’ இதழ்களில் கலகக்குரலாக ஒலித்தவர் சேனன். அவ்விதழ்களில் விளிம்புநிலை உரையாடல்கள் தனித்துவமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளையும் எழுதியவர். ‘அம்மா’வில்  கதைகளையும்  மொழிபெயர்த்துள்ளார்.    இவரின் சிறுகதைகள் மையம் சிதைக்கப்பட்டவையாகவும், கட்ட மைக்கப்பட்ட திருவுருக்களைக் கவிழ்ப்பதாகவும் இருப்பவை. அதிக விவரணைகளற்ற நேரடியான மொழியில் கதைசொல்லும்  அக்கதைகள் சொல் முறையினாற் தனித்துவமானவை. வழமையான தொடக்கம் – நடு – முடிவு என்ற தமிழ்க் கதைகளின் சட்டகங்களிற்குள் அடங்கிவிட முடியாதவை. இந்தக் கதை சொல்லல் முறையிலிருந்து

Scroll to Top