விமர்சனம்

Give it to Angkar

இரண்டாயிரங்களின் பின்னர் தமிழில் நாவல்களே எழுதப்படவில்லை என்று லஷ்மி மணிவண்ணன் அறிவித்திருந்த நாளில் லஷ்மி சரவணகுமாரின் கொமோரோ நாவலை வாசித்து முடித்திருந்தேன். நாவல் கொடுத்த கனதியான மனநிலையில் லஷ்மி மணிவண்ணனின் அந்தக் கூற்று கொமோர நாவலில் அர்த்தம் நிரம்பியதாக கணம் பட்டும் மறைந்தது. தமிழில் எழுதப்படும் ஒரு தொகுதி நாவல்கள் சம்பவங்களின் தொகுப்பாக்கம் மட்டுமே. புனைவின் கட்டற்ற சுதந்திரத்தின் நுனியைக் கூடத் தீண்டாமல் முடிந்துவிடும் எளிய வாழ்க்கைச் சித்திரிப்புகளுடன் மாத்திரம் இருக்கின்றன. நாவல்களில் தமக்கான தனியான கதை […]

நிறமழியும் வலிமையற்ற உடல்கள்

ராகவனின் மூன்று கதைகள் ராகவனின் மூன்று புதிய சிறுகதைகளின் களமும் போரின் பின்னரான யாழ்ப்பாணம். அவருடைய ஆரம்பகாலச் சோதனை முயற்சிக் கதைகளிலிருந்து புதிய கதைகளின் மொழியும், உள்ளடக்கமும் உருமாறி வந்திருக்கின்றன. ஆரம்பகால அறிக்கையிடும் கட்டிறுக்கமும், பிசிறில்லாத தன்மையுடனிருந்த மொழி வட்டார வழக்கைப் பிரதிசெய்யும் விதமாக உருமாற்றம் அடைந்திருக்கிறது.  அவர் முன்வைக்கும் கதை மாதிரிகள் தமிழிற்குப் புதியவையல்ல. ஆனால் யுத்தச் சிதிலங்களைச் சுமந்தலையும், தன் முதுகில் கலாசாரப் பழைமைகளைப் பெரும்பாரமாகக் கட்டிச் சுமக்கும் யாழின் சிதறுண்ட சமூகச் சட்டகத்தை

பேரழிவின் பிறழ் சாட்சியம் -பார்த்தீனியம்

வரலாற்று நாவல்கள் அன்றாட நிகழ்வுகளை மிகைப்படுத்திய, புனைவுத்தன்மையுடன் தரும் புதினம் அல்ல. அவை உண்மையான வரலாறை மேலும் புரிந்து கொள்வதையே சாத்தியமாக்குகின்றன. உம்பர்தோ எகோ ‘தமிழ்நதியின் பார்த்தீனியம் :  பேரழிவின் மானுட சாட்சியம்’ யமுனா ராஜேந்திரன் ‘சற்றேறக் குறைய ஈழத்தின் எல்லா நாவல்களையும் வாசித்திருக்கிறேன். ஆனால் அதில் எழுதுபவரின் அரசியலையும் சேர்த்தேதான் உள்வாங்கிக் கொள்ள முடிந்திருக்கிறது. வாசகனைப் பொறுத்தமட்டில் சிலசமயம் அவனுக்கொவ்வாத அரசியல் அஜீரணத்தையும் ஏற்படுத்தக்கூடும். பார்த்தீனியத்தில் தமிழ்நதி வைப்பது உள்ளீடாக எந்த அரசியலையும் அல்ல. உள்ளது

நவீனமும் – எதிர் நவீனமும்

தெழிற்புரட்சியிலிருந்து உருவாகிவந்த நவீனம் மனிதவளர்ச்சியில் கட்டற்ற உடைப்பை நிகழ்த்தியிருக்கிறது. அதிலிருந்து நவீன மனிதனின் பிரச்சனைகளிலே சூழழியற் பிரச்சனைப்பாடுகளும் மிகமுக்கியமாகின்றன. வேட்டைச்சமூகம் தனது நாடோடி வாழ்வைத்துறந்து நிலையாக ஓரிடத்தில் தங்கியிருக்கும் விவசாய வாழ்வினுள் நுழைந்ததிலிருந்து, இயற்கையைத் துன்பம் வளைக்கத் தொடங்கியது. அபரிமிதமாக அகழப்படும் கனிமங்கள், தாதுப்பொருட்கள் மலட்டுத்தனமான நிலத்தை உருவாக்குவது ஒருபுறம் எனில் மறுபுறத்தில் நிலத்தடிநீர், பூமி வெப்பமடைதல், காடழிப்பு என எண்ணிலடங்கா சூழழியற்பிரச்சனைப்பாடுகளினால் நவீன மனிதன் பல புதிய இடர்களைச் சந்திக்க நேர்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் சூறையாடும்

Scroll to Top