ஜனவரி 2026 கருப்புப்பிரதிகள் வெளியீடுகள்

ஆழப் புதைந்திருப்பது கல்விரல் (நாவல்) கிரிசாந் கருப்புப் பிரதிகள் 2026 “வரலாற்று முள்ளில் செருகப்பட்ட சிறு மொட்டே நீயெண்ணாக் காலத்திற்கும் உன் ஆன்மா துடிக்கப் போகின்றது பிதிர்களைக் கூவியழைத்து சாம்பலை கடலில் கரைத்த பிதாவே கூறும் சகோதரரே நீர் கூறும் அவள் தான் எடுத்த மண்ணை கடலில் ஏன் கரைத்தாள்?” அஸ்வகோஸ் * இந்த நாவலின் கருவை கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேல் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். பல கோணங்களில் பல்வேறு …

சிறகை : வெண் மத்தகக் குவியல்

சிறகை (குறுநாவல்) தர்மு பிரசாத் கருப்பு பிரதிகள் வெளியீடு : தை 2026 என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி ஆனைக்கோடரி வெளிவந்திருந்த சமயம் இலங்கை சென்றிருந்தேன். கிட்டத்தட்ட பதினாறு வருடங்களின் பின். அத்தனை வருடங்களும் மூளைக்குள் நொதித்துக் கொண்டிருந்த நிலத்தையும் மனிதர்களையும் நேரில் எதிர்கொள்ளும் படபடப்பு விமானத்திலேயே தொடங்கிவிட்டிருந்தது. அடிக்கடி கைகளைக் கோர்த்துக் கால்களுள் இடுக்கிக் கொண்டு தடித்த யன்னலுக்கு வெளியே முடிவே இல்லாமல் விரிந்திருக்கும் நீல வானை வேடிக்கை …

இச்சாவும் சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களும்…

01. இச்சா அரசியல் சராசரித்தனங்கள் நிறைந்திருக்கும் இலங்கைத் தமிழ்ச் சூழலில், ஷோபாசக்தியின் படைப்புகள்  இன்னும் சரியாக வாசிக்கப்படவில்லை. அவரது படைப்புகளில் அரசியல் கருத்துகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் வாசிப்புகளே நிகழ்ந்திருக்கின்றன. அதனால் அவரது படைப்புகளுக்கான ஆழமான வாசிப்புக் கட்டுரைகள் , விமர்சனங்கள், திறனாய்வுகள் சொற்பமாகவே வாசிக்கக் கிடைக்கின்றன. இருபது வருடங்களாக எழுதிவருபவரும், தன் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளில் ஆழமான செல்வாக்கையும் செலுத்தும் அவருடைய படைப்புலகை அணுக நல்ல வாசிப்புக் கட்டுரைகள் இல்லை …