வெள்ளிவீதி

இலக்கியக் கூடுகை 2

இது வெள்ளிவீதியின் இரண்டாவது நிகழ்வு. முதல் நிகழ்வு பரிஸில் 12 யூலை நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்வு முடிந்ததும் எல்லோருக்கும் எழுந்த நிறைவின் விசையே அடுத்த நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கிறது. வழமையான விமர்சனக் கூட்டங்களின் போதாமைகள் உணர்ந்தவை தான். ஆனால் அவற்றை மீற முடியாமல் ஒரு சடங்குபோல நிகழ்த்திக் கொண்டிருந்தோம். கூடவே நமக்கு ஒரு நிகழ்வின் அடிப்படை புரிவதில்லை.  பெரும்பாலும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு, விமர்சனக் கூட்டங்களுக்கும் வித்தியாசம் அறிந்து கொள்ளமுடியாமல் இருக்கும். கூடவே பேசுபவர்களின் பேசு திறன், அவர்களது சிந்தனைகள் குழப்பமாக இருக்கும். ஆகவே சடங்கான நிகழ்வுகள் அலுப்பூட்டக் கூடியவையாக மாறியிருந்தன. அதற்கான மாற்று முயற்சியாக எழுத்தாளார் உரையாடலை முயற்சித்திருந்தோம். எழுத்தாளருடன் உரையாடுபவரும் படைப்புக் குறித்து விரிவாக உரையாட முடிந்தாலே நிகழ்வு செறிவாக இருக்க முடியும். உண்மையில் நான் எதிர்பார்ததைவிட ஒவ்வொருவரும் தங்கள் படைப்புலகம், படைப்புச் செயற்பாடுகள் சார்ந்து விரிவாகவே தங்கள் அனுபவங்கள், பார்வைகள் கருத்துக்களை முன்வைத்தார்கள். அவை அவர்களது படைப்புக்களை இன்னும் நெருக்கமாக வாசிப்பதற்கான திறப்புக்களைக் கொடுத்திருக்கின்றன.  ஈழ இலக்கியச் சூழலில் அரிதான முயற்சிகள். எங்களுடைய எழுத்தாளர்களுடனான நேர்காணல்கள் கூட இரண்டு எல்லைகளில் மட்டும் இருக்கக் கூடியவை. ஒன்று எழுத்தாளரை விமர்சனபூர்வமாக அரசியல் கருத்துக்களை கேள்விகளாகக் கேட்பார்கள். இரண்டு அவர்களாது கருத்துக்கள், படைப்புகள் பற்றிய மேலோட்டமான விதந்தோதல்களை செல்லி முடிப்பார்கள். இரண்டும் இரண்டு எல்லைகளில் இருந்தும்  அணுகக் கூடியவை. ஆனல் இவை போதுமனவை அல்ல. எழுத்தாள உரையாடல் எல்லோரும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டிருந்தனர். ஆக அந்த உந்துதல் கொடுத்த விளைவு அடுத்த நிகழ்வு சூரிஸ்-ல் ஏற்பாடாகி இருக்கிறது. நண்பர்களை அழைக்கிறோம்.

வெள்ளிவீதி 
இலக்கியக் கூடுகை 2
01.11.2026
ZURICH