வெள்ளிவீதி

இது வெள்ளிவீதியின் இரண்டாவது நிகழ்வு. முதல் நிகழ்வு பரிஸில் 12 யூலை நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்வு முடிந்ததும் எல்லோருக்கும் எழுந்த நிறைவின் விசையே அடுத்த நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கிறது. வழமையான விமர்சனக் கூட்டங்களின் போதாமைகள் உணர்ந்தவை தான். ஆனால் அவற்றை மீற முடியாமல் ஒரு சடங்குபோல நிகழ்த்திக் கொண்டிருந்தோம். கூடவே நமக்கு ஒரு நிகழ்வின் அடிப்படை புரிவதில்லை.  பெரும்பாலும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு, விமர்சனக் கூட்டங்களுக்கும் வித்தியாசம் அறிந்து கொள்ளமுடியாமல் …

வெள்ளிவீதி இலக்கியக் கூடுகை 1

உரையாடல் பகுதி 1 நாவல்களில் மொழி, காட்சிச் சித்தரிப்பு குறித்து தொடர்ந்து கேள்விகள் வந்தபடியே இருக்கின்றன. தமிழில் நல்ல நாவல்கள் என ஒரு பட்டியல் போட்டால், அதில் பெரும் விழுக்காடு நாவல்கள் செறிவான மொழியில், துல்லியமான காட்சிவிவரணைகள், சித்தரிப்புகளைக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆனால் அவற்றில் பொதுச் சித்திரங்கள் வராது. அப்படிப் பொதுச் சித்திரங்கள் வந்தால் அது நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுப்பதில்லை. அவற்றில் எழுத்தாளருக்கே தனியாகத் துலங்கும் புறச்சூழல் இருக்கும். அவரது …

வெள்ளிவீதி – இலக்கியக் கூடுகை

சிறிய இலக்கியக் கூட்டங்கள் குறித்து ஓர் அவநம்பிக்கை இருக்கிறது. அது இக் காலகட்டத்தில் பலருக்கும் எழும் சந்தேகம். சமூக வலைதளங்கள் என்ற பெரிய வெளி இருக்கும் போது இலக்கியக் கூட்டங்களை ஏன் மிகச் சிறியதாக சொற்ப நபர்களுடன் நிகழ்த்தவேண்டும்? அதனால் என்ன பயன்? ஒத்த ரசனை, ஒத்த அறிவுத்திறனான நண்பர்கள் மட்டுமே கூடி கலையுமிடமாக மட்டும் அது ஏன் இருக்க வேண்டும்? அப்படியான சிறு கூட்டங்களால் அறிவுத்தளத்தில், பண்பாட்டு வெளியில் …