மிக ரகசிய இயக்கம்
01 ஓம் குரு எனக்கும் உங்களுக்கு வந்த சந்தேகமே வந்தது. அவள் கஞ்சாப்புகையின் கதகதப்பில் கதையைச் சொல்லத் தொடங்கிய கையோடு நானும் அவளை இடைமறித்து இதே கேள்வியைத்தான் கேட்டேன். அவள் அலங்க மலங்க முழித்தாள். இன்னொரு கஞ்சாவைத்துச் சுருட்டிய சிகரெட்டினை பெட்டியிலிருந்து உருவியெடுத்து அதன் வாசனையை ஆழமாக உள்ளிழுத்தாள். பின்னர் அதனை உள்ளங்கையில் வைத்து நீண்ட விரல்களினால் உருட்டினாள். ’இல்லவே இல்லை ஊரிலை எண்ட அப்பாவின் இயக்கம் மிக இரகசிய இயக்கம்’ என்றபடி எழுந்து சென்று என் […]