அம்மா மகள்

ஆனைக்கோடாலி

01. எலுங்கப் பாறை முகட்டில் இருவர் தயங்கி நிற்பது தெரிந்தது. தயக்கம் எதிர்பார்த்தது தான். மழைநீர் அரித்து, வழுக்குப் பாசியோடியிருக்கும் அபாயமான செங்குத்துச் சரிவு குறுக்கிட்டதில் ஏற்பட்ட தயக்கம். இருவரும் பட்ட அசைவுகள் முகில் மடிப்புகளினுள் தெரிந்தாலும், அவர்களுடைய கண்களில் கனலக்கூடிய அச்சத்தை மலையின் கீழ் இருந்தே என்னால் உணர முடிகிறது; கற்பனையில். கால் இடறினால் கீழே ஆழத்தில் ஆற்றின் குறுக்காகக் கட்டப்பட்டிருக்கும் கல் அணையின் மடிப்பில் உடல் கிடைக்கும்; சிவந்த தசைக் கூழாக. எங்கள் முறிக்கு, […]

மிக ரகசிய இயக்கம்

01 ஓம் குரு எனக்கும் உங்களுக்கு வந்த சந்தேகமே வந்தது. அவள் கஞ்சாப்புகையின் கதகதப்பில் கதையைச் சொல்லத் தொடங்கிய கையோடு நானும் அவளை இடைமறித்து இதே கேள்வியைத்தான் கேட்டேன். அவள் அலங்க மலங்க முழித்தாள். இன்னொரு கஞ்சாவைத்துச் சுருட்டிய சிகரெட்டினை  பெட்டியிலிருந்து உருவியெடுத்து அதன் வாசனையை ஆழமாக உள்ளிழுத்தாள். பின்னர் அதனை உள்ளங்கையில் வைத்து நீண்ட விரல்களினால் உருட்டினாள். ’இல்லவே இல்லை ஊரிலை எண்ட அப்பாவின் இயக்கம் மிக இரகசிய இயக்கம்’ என்றபடி எழுந்து சென்று என்

Scroll to Top