ஈழம்

மூர்க்கரொடு முயல்வேனை 2

என்னுடைய எதிர்வினைகளும் கருத்துகளும் ஏன் உரையாடல்களும் கூட மதுரன், சன்சிகன் போன்ற அறியாமையின் மூடர்களுடன் இல்லை. இந்த வசையர்களுடன் உரையாடுவதில் அர்த்தமோ, பிரயோசனமோ இல்லை. ஒரு விடயத்தைக் கிரகிக்க இயலாதவர்களுடன் என்ன உரையாடல் செய்ய முடியும்? கொஞ்சம் வாசிப்பும் எழுத்துப் பரீட்சியமும் இருந்தாலே இவர்களிடம் வெளிப்படும் அறியாமையின் மூர்க்கத்தை அறிந்து கொள்ள முடியும். இவர்களால் சிறு கட்டுரையையோ அதன் மையக் கருத்தையோ வாசித்துக் கிரகித்து தங்கள் எண்ணங்களைத் தொகுத்து முன்வைக்க முடியாது. என்னுடையது மிகச் சிறிய கட்டுரை. […]

மூர்க்கரொடு முயல்வேனை

//  இன்றைய செய்திகளின் தொகுப்பு !  சோபாசக்திக்கு தன்னறம் விருது வழங்கியிருக்கிறது. ஒடுக்கப்படுபவர்களுக்காக ஒலிக்கும் குரல் சோபாவினதாம்.  நண்பர் கிரிசாந்தின் சமீபத்திய பேச்சுக்களில் இந்துத்துவ வாடை அடிப்பதாக அடிக்கடி நண்பர்கள் விசனப்பட்டுக்கொள்கிறார்கள்.  தன்னறம் சிவராஜ் ஒரு கடும் இந்துத்துவா என்பது இலக்கிய நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும். நண்பர் கிரிசாந்தின் புத்தக அச்சாக்க பணிகளை முழுமையாக செய்து கொடுத்தது தன்னறம். சிவராஜ் மற்றும் தன்னறம் ஜெயமோகனின் B team என்பது எழுத்தாள, இலக்கிய வட்டங்களில் பேசுபொருள். ஜெயமோகனை தீவிரமாக

இமிழ் : அரசியல் புலம்பெயரிகளால் பிற சமூகங்களுடன் ஏன் பண்பாட்டு ஊடாட்டம் செய்ய முடிவதில்லை?

சென்னையில் கருப்புப் பிரதிகள் ஏற்பாடு செய்த ‘இமிழ்’ சிறுகதைத் தொகுப்பு மீதான விமர்சனக் கூட்டத்தில் (05.05.2024) ஆய்வாளர் கண்ணன்.எம் அவர்களுடைய விமர்சனங்களைப் பார்த்தேன். கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் என்ன ‘விமர்சன’ முறையோடு இருந்தேனோ அதே நோக்கோடு அட்சரம் பிசகாமல் ஒரு தொகுப்பை விமர்சித்திருக்கிறார். காலப்பயணம் செய்து என்னையே – நான் பார்த்ததுபோல இருந்தது. என்னுடைய நல்லூழ் ஒரு சில  வருடங்களுக்குள்ளேயே என் தேடலின் பாற்பட்டு, குற்றம் கண்டுபிடிக்கும், படைப்புகளில் இல்லாததைத் தேடும் விமர்சன முறையிலிருந்து வெளிவந்து

சிறுதுளை

01. திருவைத் தேடி வந்திருந்த சின்னவனும், மொறீஸும் களைத்திருந்தனர். அவர்களது மென்நீலக் கட்டம் போட்ட சட்டை வியர்வையூறி வரியாக வெண் உப்பும், சேற்று நிறத்தில் புழுதியும் படிந்திருந்தது. நீண்ட தூரம் நடந்தே வந்திருப்பது சோர்ந்து உற்சாகமிழந்திருக்கும் கண்களில் தெரிந்தது. ஆனால் வீட்டுப் படலைக்கு மேலாகத் திருவைப் பெயர் சொல்லி அழைத்த மொறீஸின் குரல் சோர்வேயில்லாத அதிகாரத்தின் வரண்ட தொனியில் இருந்தது.

ஆனைக்கோடாலி

01. எலுங்கப் பாறை முகட்டில் இருவர் தயங்கி நிற்பது தெரிந்தது. தயக்கம் எதிர்பார்த்தது தான். மழைநீர் அரித்து, வழுக்குப் பாசியோடியிருக்கும் அபாயமான செங்குத்துச் சரிவு குறுக்கிட்டதில் ஏற்பட்ட தயக்கம். இருவரும் பட்ட அசைவுகள் முகில் மடிப்புகளினுள் தெரிந்தாலும், அவர்களுடைய கண்களில் கனலக்கூடிய அச்சத்தை மலையின் கீழ் இருந்தே என்னால் உணர முடிகிறது; கற்பனையில். கால் இடறினால் கீழே ஆழத்தில் ஆற்றின் குறுக்காகக் கட்டப்பட்டிருக்கும் கல் அணையின் மடிப்பில் உடல் கிடைக்கும்; சிவந்த தசைக் கூழாக. எங்கள் முறிக்கு,

Scroll to Top