இச்சாவும் சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களும்…

01. இச்சா அரசியல் சராசரித்தனங்கள் நிறைந்திருக்கும் இலங்கைத் தமிழ்ச் சூழலில், ஷோபாசக்தியின் படைப்புகள்  இன்னும் சரியாக வாசிக்கப்படவில்லை. அவரது படைப்புகளில் அரசியல் கருத்துகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் வாசிப்புகளே நிகழ்ந்திருக்கின்றன. அதனால் அவரது படைப்புகளுக்கான ஆழமான வாசிப்புக் கட்டுரைகள் , விமர்சனங்கள், திறனாய்வுகள் சொற்பமாகவே வாசிக்கக் கிடைக்கின்றன. இருபது வருடங்களாக எழுதிவருபவரும், தன் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளில் ஆழமான செல்வாக்கையும் செலுத்தும் அவருடைய படைப்புலகை அணுக நல்ல வாசிப்புக் கட்டுரைகள் இல்லை என்பது தமிழின் இயல்பான வழமைதான் என்பதால் […]