தர்பாரி ராகம் – கலைமுகம் கட்டுரை

இந்திய செவ்வியல் நாவல்களில் வெளிப்படும் விரிவான சமூகச் சித்திரங்கள் இப்போதும் ஆர்வமூட்டக் கூடியவை. நீலகண்டப் பறவையைத் தேடி, கறுப்பு மண், விஷக்கன்னி, அரை நாழிகை நேரம், ஒரு குடும்பம் சிதைகிறது, அழிந்த பிறகு, ஆரோக்கிய நிகேதனம் போன்றவை. இன்னும் பட்டியல் விரிவானது. அவை மொழிபெயர்பாக தமிழிலும் கிடைக்கின்றன. இந்த நாவல்களில் பலமாக இருக்கும் இரண்டு முக்கிய இயல்புகள், இதுவரை வந்த ஈழ நாவல்களில் பெரும் குறைபாடுகளாக இருக்கின்றன. ஒன்று, இவை …

புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும்

சில சமகால ஈழ நாவல்களை முன்வைத்து. சமகால ஈழ நாவல்களை வாசிக்குந்தோறும் அவற்றில் பல அடிப்படைப் போதாமைகளை உணர முடிகிறது. நாவல்கள் என்று நாம் உத்தேசிக்கும் போது அவை மிக விசாலமான பெரும் பரப்பு. அதனுள் பல வர்ண பேதங்களும், அழகியற் தரப்புகளும், வடிவ பேதங்களும் கூட உண்டு. ஆனாலும் அவற்றை எல்லாம் மேவி நாவல் எனும் கலை வடிவம் கோரும் சில அடிப்படைகள் உண்டு. இவை முன் நிபந்தனைகள் …