தர்மு பிரசாத் கதைகள்

இமிழ் : திருஞானசம்பந்தன் லலிதகோபன் – 2

11.எட்டு கிழவர்கள் : தமயந்தி தமயந்தி அவர்கள் யாழ். மாவட்டத்தின் அனலைதீவினை சேர்ந்தவர். அவரது கதைகளில் நெய்தல் நிலத்தின் சுவடுகளை நிறையவே காணலாம். தீவகமும் அதனோடு இணைந்த நெய்தல் நிலத்தினையும் தனது கதைகளில் புனைவாக்கம் செய்பவர். இதற்கு முன்னர் அவரின் சிறுகதை தொகுதியான “ஏழு கடற்கன்னிகளை” வாசித்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகவே இந்த கதையினையும் காண முடிகிறது. இலம்பங்குடாவும் அதனோடு இணைந்த வலம்புரித்தீவுமே இந்த கதை நிகழும் களங்கள். இலம்பங்குடா புனித மிக்கேல் தேவாலாயத்தின் அருட்துறவியான “சொக்கட்டான் சுவாமிகள் […]

மிக ரகசிய இயக்கம்

01 ஓம் குரு எனக்கும் உங்களுக்கு வந்த சந்தேகமே வந்தது. அவள் கஞ்சாப்புகையின் கதகதப்பில் கதையைச் சொல்லத் தொடங்கிய கையோடு நானும் அவளை இடைமறித்து இதே கேள்வியைத்தான் கேட்டேன். அவள் அலங்க மலங்க முழித்தாள். இன்னொரு கஞ்சாவைத்துச் சுருட்டிய சிகரெட்டினை  பெட்டியிலிருந்து உருவியெடுத்து அதன் வாசனையை ஆழமாக உள்ளிழுத்தாள். பின்னர் அதனை உள்ளங்கையில் வைத்து நீண்ட விரல்களினால் உருட்டினாள். ’இல்லவே இல்லை ஊரிலை எண்ட அப்பாவின் இயக்கம் மிக இரகசிய இயக்கம்’ என்றபடி எழுந்து சென்று என்

நிலாவரை

தங்கராசு, உணவகம் வந்தபோது அது  பூட்டி இருந்தது. நேற்று மதியம் வரை சன சந்தடியில் அல்லாடிய உணவகம் இன்று எவ்விதச் சலனமும் இல்லாமல் இருந்தது. அதன் கண்ணாடிக் கதவில் புதிதாக வெள்ளைத் துண்டில் அறிவித்தல் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அதில் அடுத்த மாதம் கடை மீளத் திறக்கப்படும் என்ற அறிவித்தல் இருந்தது. உணவகத்தைப் பூட்டியதற்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக்கோரி இருந்தார்கள். தங்கராசுவிற்கு அது  பிடித்திருந்தது. அறிவித்தலை மெதுவாகத் தடவிப் பார்த்துத் தலையை ஆட்டினார். தன்னிடமும் மன்னிப்பு கேட்டிருக்கலாமோ என்று 

Scroll to Top