தீபச்செல்வன் : அரை உண்மையர்

தீபச்செல்வன் படைப்புக்களை தொடர்ந்தும் கடுமையாக நிராகரித்து வருபவன் நான். அவருடைய எழுத்துக்கள் அரை உண்மைகள். மிகு போலியானவை என்பது என் எண்ணம். அவற்றில் வெற்று ஆவேசக் கூச்சல்களுக்கு அப்பாலான வாழ்க்கை நோக்கோ, சமூகம் குறித்த கரிசனைகளோ வெளிப்படுவதில்லை. அவை மிகை பாவனையும், போலியுமான முன்வைப்புகள் நிறைந்தவை. ஆகவே உடனடிக் கவனிப்புக்கு உள்ளாகின்றன. அவரது எழுத்துக்குப் பல பாவனைகள் இருக்கின்றன. போலியான முகமூடிகள் போல, நுரை தள்ளும் ஆவேசப் பேச்சுக்கள் போல. …

புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும்

சில சமகால ஈழ நாவல்களை முன்வைத்து. சமகால ஈழ நாவல்களை வாசிக்குந்தோறும் அவற்றில் பல அடிப்படைப் போதாமைகளை உணர முடிகிறது. நாவல்கள் என்று நாம் உத்தேசிக்கும் போது அவை மிக விசாலமான பெரும் பரப்பு. அதனுள் பல வர்ண பேதங்களும், அழகியற் தரப்புகளும், வடிவ பேதங்களும் கூட உண்டு. ஆனாலும் அவற்றை எல்லாம் மேவி நாவல் எனும் கலை வடிவம் கோரும் சில அடிப்படைகள் உண்டு. இவை முன் நிபந்தனைகள் …